வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாகிஸ்தான் ஆரம்பத்தில் அமெரிக்க ஆயுதங்களை வாங்கி வந்தாலும், சமீப காலங்களில் சீனாவிடம் அதிகமாக வாங்கியுள்ளது,. சீனா, பாகிஸ்தானின் பாதுகாப்பு தேவைகளில் 82% வழங்கி வருகிறது. அதில் JF-10C, JF-17 போர் விமானங்கள், HQ-9P, LY-80, PL-15, FN-6 போன்ற ஏர்படை காப்பு அமைப்புகள் உள்ளன. இவையனைத்தும் இருந்த போதும், இந்தியா 2019ல் பாலகோட் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதோடு, இப்போது பாகிஸ்தானின் உட்பகுதிகளில் பல விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனால் சீனாவின் ஏர்படைக் காப்பு அமைப்பின் பலவீனம் வெளிச்சமாகியுள்ளது அதே நேரத்தில் சீனாவின் டிரோன்கள் மற்றும் போர் விமானங்களும் இந்தியாவின் ஏர்படை பாதுகாப்பு அமைப்பால் சுதர்சன சக்கரம் அழிக்கப்பட்டன. இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட டிரோன் காமிகாஸ், ருஸ்தம், நேத்ரா ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பம் சார்ந்தவை. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றக்கூடிய ஆயுத விநியோகஸ்தராக சீனா உருவாக முயற்சி செய்து வரும் நிலையில், இந்தியாவின் தாக்குதல்கள் சீனாவின் ஆயுத உற்பத்தி திறனை கேள்விக் குறியாக்கியுள்ளது. ஆபரேசன் சிந்தூர் தாக்குதலால் இந்தியா பயன்படுத்திய சுதர்சனம் சக்கரம் மற்றும் F-16, JF-17, J-10C போன்றவற்றை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. எனவே இந்தியாவின் தாக்குதல் என்பது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் ஒரு பெரிய இழப்பாகும். அதனால்தான் சீன டூல்கிட் குழுக்கள் இந்திய பாதுகாப்பும், இந்திய தலைமைத்துவத்தையும் பழிவாங்க முயற்சிக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந்தியா நீண்டகால யுத்தத்தில் இறங்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதன்மூலம் சீனா, பாகிஸ்தானுக்கு மேலும் ஆயுதங்களை விற்று லாபமடையலாம். அமெரிக்கா தங்கள் நாட்டின் ஆயுத நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது போலவே சீனாவும் நினைக்கிறது. ஆனால் இந்தியாவின் தாக்குதல் அதன் ஆயுத விற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது. மொத்தத்தில் சீனா தயாரிப்புகள் போலி என்று கூறப்படுவது போலவே சீனா தயாரிக்கும் ஆயுதமும் டம்மி என்று உலகிற்கு தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானிடம் பணம் கிடையாது சீனா வியாபாரத்துக்காக கொடுத்த சாம்பிள் தான் பயன்படுத்தப்பட்டன..துருக்கி டிரோன்கள் காசு வாங்கிக்கொண்டு தந்தார்களா அல்லது வியாபார சாம்பிளாக கொடுத்தார்களா தெரியவில்லை