உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக். மக்கள் வெளியேறலாம்; மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய டில்லி

பாக். மக்கள் வெளியேறலாம்; மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய டில்லி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தூதரக பாதுகாப்பு வாபஸ், சிந்து நதிநீர் நிறுத்தம் என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை முன் எடுத்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g7d3m20q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை நாடு திரும்பவும், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவிட்டது. அதை அந்தந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியது.இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டில்லி உள்துறை அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பை தமது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மேலும் கூறி உள்ளதாவது;ராஜதந்திர மற்றும் நீண்டகால விசாக்கள் தவிர, தற்போதுள்ள அனைத்து செல்லுபடியாகும் விசாக்கள் ஏப்.2, 2025 முதல் ரத்து செய்யப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ விசாக்கள் ஏப்.29ம் தேதிக்கு பின்னர் செல்லாது. பாகிஸ்தானியர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramakrishnan Mahaveer
ஏப் 27, 2025 08:16

இந்தியாவில் உள்ள மசூதிகளை சோதனை செய்து, பாக்கிஸ்தான் கொடிகளை வைத்திருப்போரை கைது செய்து அவர்களை தேசவிரோதிகளாக அறிவித்து அவர்களை நாடற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.


அப்பாவி
ஏப் 27, 2025 07:18

நாங்க வெளியேத்த மாட்டோம். நீங்களா வெளியேறலாம்.


Ramesh Sargam
ஏப் 26, 2025 11:44

பாகிஸ்தானியர்கள் மட்டும் அல்ல. பாகிஸ்தானியர்களை ஆதரிப்பவர்கள், பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாம் நாட்டு தேசதுரோகிகள் கூட உடனே மூட்டைமுடிச்சுடன், தங்களது பரிவாரங்களுடன் நம் இந்திய நாட்டை விட்டு வெளியேறவேண்டும்.


GMM
ஏப் 26, 2025 11:17

பாகிஸ்தான் பிரஜைகள் வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, டில்லி அரசாங்கம் அமல்படுத்தி இருக்கிறது என்றால் , மற்ற மாநிலங்கள் உடன் அமுல்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். மறுக்கும் மாநில மக்கள் பிரதிநிதிகள் தகுதி அந்த தேதிக்கு பின் தானே செயல் இழக்க சட்டம் வகுத்து, ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வர வேண்டும். முதலில் தேசிய ஒருமைப்பாடு வலு பெற வேண்டும். பாதுகாப்பில் அரசியல், சமரசம் கூடாது


Keshavan.J
ஏப் 26, 2025 14:02

எல்லாம் பிஜேபி மாநிலங்கள் இந்த வெளியேற்றதை தோடங்கி விட்டார்கள். தேஷ் துரோகி மாநிலங்கள் இதை செய்கிறீர்களா என்று தெரியவில்லை


Natchimuthu Chithiraisamy
ஏப் 26, 2025 11:13

பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் தொழிலதிபர்கள் கண்டிப்பாக இந்தியாவை விட்டு சென்று விடுங்கள். அதை அருகில் வசிக்கும் மக்கள் தான் உறுதி செய்யவேண்டும்.


V Venkatachalam
ஏப் 26, 2025 11:13

ரேகா அவர்களே, உங்களுக்கு எங்கள் சல்யூட். எங்க தமிழ் நாட்டின் அறிவிப்பு எப்போ வரும் என்று தெரியவில்லை. ஆனால் கடைசியிலாவது வந்து விடும். ‌


அப்பாவி
ஏப் 26, 2025 10:53

ஏன்? ராஜதந்திர ஆளுங்களுக்கு தனி சலுகை? அவிங்க நல்லவங்களா? கேக் வெட்டி கொண்டாடுன மூர்க்கர்கள் தானே?


புதிய வீடியோ