உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாதிகள் சதித்திட்டம்; உளவுத் துறை எச்சரிக்கை

ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாதிகள் சதித்திட்டம்; உளவுத் துறை எச்சரிக்கை

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலுக்கு பதிலடியாக ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாக்., பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o0574pxc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், பாக்., ராணுவ விமானப்படை தளங்களும் பெருமளவில் சேதமடைந்தன. இந்நிலையில், நம் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க, லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜமாத் - இ - இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் பங்கேற்ற உயர் மட்ட கூட்டம் கடந்த மாதம் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கூட்டத்தின் போது, இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை நடத்த வேண்டும் என, பயங்கரவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தங்களது ஆதரவாளர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கி உள்ளனர். மேலும், போதை பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியை திரட்டவும் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக குளிர்காலங்களில் எல்லையில் ஊடுருவல் சம்பவங்கள் குறையும். ஆனால், இந்த முறை தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களை அதிகப்படுத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பாரதி
நவ 06, 2025 13:04

படிப்பதற்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம், சரி... ஏற்கலாம்... ஆனால் பணிகளில் ஏன் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அதன் பொருள் என்ன? தகுதி இல்லாதவர்களும் பணி செய்யலாம் என்றுதானே? இது மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? மக்களுக்கு எப்படி அரசு சார்ந்த காரியங்கள் சரியாக பூர்த்தி ஆகும்? பிறகு மக்களை கொடுமைப்படுத்த தான் சட்டம் வேண்டுமா? அதற்கு தான் வரி கட்டப்படுகிறதா? சம்பளம் கொடுக்கப்படுகிறதா? அறிவற்றவர்களின் சிந்தனை தான் வேலைகளில் இட ஒதுக்கீடு இட ஒதுக்கீட்டு பலன்களை அடைய தகுதி உள்ள சமூகத்தில் தான் நான் பிறந்துள்ளேன். ஆனாலும் எனக்கு இது பிடிக்கவில்லை இதை பேசுபவர்கள் அனைவரும் நாசமாகட்டும் என்று சபிக்கிறேன்


PERUMAL C
நவ 06, 2025 09:35

உன்ன மாதிரி ஆளுங்க இருக்கும்வரை அமைதி வராது


Rahim
நவ 06, 2025 09:24

ராகுல்ஜி அவர்கள் இளைஞர்களிடம் ஒட்டு திருட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டார் அதனால் அவர்களை மடைமாற்ற பீஹார் தேர்தல் அடுத்தது மஹாராஷ்ட்டிரா உள்ளாட்சி தேர்தல் வரை இதுபோன்ற செய்திகள் அடிக்கடி இந்த கோடி மீடியாக்களை வைத்து பரப்பப்படும்.


ராமகிருஷ்ணன்
நவ 06, 2025 07:21

வாருங்கள் வந்து சாவுங்கள்


Nathan
நவ 06, 2025 05:30

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானை இப்பவே அடித்து நொறுக்கி விட வேண்டும். பாகிஸ்தான் ராணுவ தளங்கள் அனைத்தையும் முழுவதும் அழித்து விட வேண்டும்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 04:11

மூணு துண்டா பிரிச்ச பிறகு அமைதிப் பூங்காவாக மாறிடிச்சின்னு மார்தட்டினீங்களே?


N Sasikumar Yadhav
நவ 06, 2025 06:21

என்ன செய்ய லஸ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்க தங்களுடைய ஆதரவாளர்களை காஷ்மீரில் தேடுகிறார்களாம். தமிழகத்திற்கு வந்தால் உங்கள மாதிரியான ஆட்கள் நிறைய பேர் கிடைப்பார்கள் அதுவும் திராவிட மாடல் ஆசியோடு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது ஓட்டுப்பிச்சைக்காக எதையும் செய்கிற இதயம் கொண்டவர்கள் இந்த திராவிட மாடல் கட்சியினர்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 06, 2025 07:56

ஒரு கும்பல் டிசைன் அப்படி


Kasimani Baskaran
நவ 06, 2025 03:55

இந்த முறை வாய்ப்புக்கிடைத்தால் பல விமானதளங்களை ஒன்றும் இல்லாமல் செய்வது அவசியம்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 07:49

அதுக்கு டிரம்ப்பு அனுமதி தரணுமே


முக்கிய வீடியோ