உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உருக்குலைந்த காசாவை இந்தியா தான் மறுகட்டமைக்க வேண்டும்; பாலஸ்தீன தூதர் வேண்டுகோள்

உருக்குலைந்த காசாவை இந்தியா தான் மறுகட்டமைக்க வேண்டும்; பாலஸ்தீன தூதர் வேண்டுகோள்

புதுடில்லி: போரால் உருக்குலைந்து போன காசா நகரை இந்தியாவை விட்டால் வேறு யாராலும் கட்டமைக்க முடியாது என்று இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹமாஸூக்கு எதிரான போரில் இஸ்ரேல் காசாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இரு ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சுமார் 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்களின் தலையீட்டின் காரணமாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. 'முதற்கட்டமாக, பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசாவில் உள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பாலஸ்தீன மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், காசாவை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாக இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ், இந்தியாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இந்தியா தான் உலகின் சாம்பியன். காசாவில் மனிதாபிமான பேரழிவை முடிவுக்கு கொண்டு வருவதிலும், போருக்கு பிந்தைய மறுகட்டமைப்பில் இந்திய முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியா இல்லையென்றால், பிறகு யார்?. இந்தியாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் இஸ்ரேலுடனான சிறந்த உறவின் மூலம், பாலஸ்தீனம் பாதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட 67 ஆயிரம் பேரில், முழுக்க முழுக்க மக்கள் மட்டுமே. ஹமாஸைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஊட்டச்சத்து குறைவு, உணவுப்பற்றாக்குறை காரணமாக 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு ஆபரேஷன்கள் மயக்க மருந்து இல்லாமல் நடந்துள்ளன. மயக்க மருந்து இல்லாமலே பலரது கை மற்றும் கால்கள் அறுத்து எடுக்கப்பட்டன. காசாவில் நிகழ்த்தப்பட்டது வன்முறை அல்ல, இனப்படுகொலை என்று சர்வதேச அமைப்புகளே சொல்லி வருகின்றன. இஸ்ரேல் கண்காணிப்பு குழுக்கள் கூட இது இனப்படுகொலை என்று அறிவித்தன, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ALWAR
அக் 16, 2025 17:54

இந்தியா எக்காலத்திலும் தீவிரவாத நாடுகளுக்கு உதவ கூடாது


S.jayaram
அக் 15, 2025 09:33

எங்கள் நாட்டில் உள்ள வக்பு வாரியத்தில் உள்ள சொத்துக்களை வித்து உங்கள் நாட்டை புனரமைக்கிறோம். எங்கள் நாட்டில் உள்ளவர்களுக்கு தேவையானவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


Sivak
அக் 14, 2025 12:26

இங்க பாலஸ்தீனுக்கு உருகுணவனுங்க எல்லாம் காசு அனுப்புங்கடா.. இந்தியா மக்கள் வரிப்பணம் ஒரு பைசா இவனுங்களுக்கு போக கூடாது. திருட்டு திமுக வை ஒரு 500 கோடி அனுப்ப சொல்லுங்க ...


vee srikanth
அக் 15, 2025 12:02

இவங்களை இங்கிருந்து அங்க அனுப்பிடலாம்


Swami Nathan
அக் 11, 2025 03:09

அதானிக்கு புதிதாக மற்றுமொரு தொழில் வாய்ப்பு.


Sree
அக் 10, 2025 22:23

இந்தியாவில் உள்ள எல்லா மூர்க்கன்ஸ்களும் குடும்பத்துடன் சென்று குடியேறி காசாவை சீர் படுத்துங்கள்.


Venkatesan Srinivasan
அக் 11, 2025 16:03

இந்தியாவிற்கு வேண்டாத வேலை. தாலிபன்களால் அழிந்த ஆப்கானிஸ்தானை மீண்டும் உருவாக்க நம் பாரதம் அப்படிதான் இந்திய மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்தது. ஆனால் மறுபடியும் அங்கே தாலிபான் ஆட்சிக்கு வந்துவிட்டது. போட்ட முதலீடு அனைத்தும் வீண். முதலீடு செய்த இந்திய நிறுவனங்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வர வேண்டியதாயிற்று. வன்முறை கும்பல்கள் உள்ள பிரதேசத்தில் நாம் எந்த உதவியும் செய்வதில் அர்த்தமில்லை. அவர்களை சுற்றியுள்ள அவர்களின் ஆதரவு சுற்றங்கள் அவர்களை காப்பாற்றட்டும். இந்திய மக்களின் வரிப்பணத்தில் தண்ட செலவு செய்ய வேண்டாம்.


பெரிய ராசு
அக் 11, 2025 16:46

மூர்க்கன் சம்பத்தப்பட்ட எதுவும் நமக்கு ஆகாது , கையை கட்டி பார்ப்பது நல்லது


முக்கிய வீடியோ