உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது; எதிர்க்கட்சியினர் அமளி!

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது; எதிர்க்கட்சியினர் அமளி!

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று (நவ.,25) துவங்கியது. அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,25) துவங்கியது. டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டதொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=le9jaw5k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ.,25) லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் துவங்கியதும், இந்த விவகாரத்தை விவாதிக்க கோரி, காங்., - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இண்டியா' கூட்டணியினர் கோஷம் எழுப்பினர். அவை துவங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக, லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
நவ 25, 2024 16:59

மஹாராஷ்டிராவில் கிடைத்த தோல்வியால் ஆத்திரம் .... மக்கள் தங்களை நம்பவில்லையே என்கிற எரிச்சல் .......


Narayanan
நவ 25, 2024 16:52

உபயோகமான எந்த வேலையையும் எதிர்க்கட்சிகள் செய்யாது . சும்மா கூச்சல் குழப்பம் செய்து வெளியேறுவது இவர்கள் வாடிக்கை . தமிழக எம் பி க்களை காசுகேட்க சொல்லி இருக்கிறார் ஸ்டாலின் . 2026 தேர்தலுக்கு திருட்டு கணக்கு எழுதி சுடவேண்டி இருக்கிறதாம் . இவர்களின் தனி ஆவர்த்தனம் பணம் பற்றியது மட்டுமே . ஏனைய விஷயங்களுக்கு குரல் கொடுக்கப்பபோவதில்லையா? 40 தும் தண்டம்தான் ஸ்டாலின் .


Rpalnivelu
நவ 25, 2024 23:30

அலிபாபா சொல்றார் நாற்பதும் செய்யுது.


RAVINDRAN.G
நவ 25, 2024 14:56

அடுத்தமுறையாவது இந்த தத்தி எம் பி க்களை தேர்ந்து எடுக்காதீர்கள். மக்கள் வரிப்பணம் வீண். இவர்களால் நாடு நாசமாகும். மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அந்நிய கைக்கூலிகள் நாட்டை துண்டாட நினைப்பவர்கள் மக்கள் அடையாளம் கண்டு நியாயமாக ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களித்தால் இந்தமாதிரி எம் பிக்கள் வருவது குறையும். நாடும் நலம் பெரும் . வந்தே மாதரம்


Dharmavaan
நவ 25, 2024 15:43

இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒட்டு போடுபவர் அறிவாளி இல்லை


Ramesh Sargam
நவ 25, 2024 13:00

நான் கடந்த சில நாட்களாக கூறியது இப்பொழுது நடக்கிறது. ஆம், இந்த எதிர்க்கட்சியினர் கூட்டத்தொடருக்கு வருவதே, தொடர் ஆரம்பித்தவுடன் ரகளை செய்து, கூட்டமாக வெளியேறி, அங்குள்ள உணவு வளாகத்தில் நன்றாக சாப்பிட்டு, பிறகு அவர்கள் தங்கும் அறைக்கு சென்று இளைப்பாறி, மீண்டும் நாளை வந்து .. அதே ரகளையில் ஈடுபடுவார்கள். மக்களுக்கு தேவையான எதையும் பேசி, ஒரு முடிவு காணமாட்டார்கள்.


sankar
நவ 25, 2024 12:57

மக்களின் முதுகில் குத்தியதால், மக்கள் முகத்தில் குத்திவிட்டார்கள்- விளைவு இங்கே வந்து குதிக்கிறதுகள்


Nandakumar Naidu.
நவ 25, 2024 12:54

அமலியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்பிக்களை சபாநாயகர் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் வெளியில் தூக்கி எறிய வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 25, 2024 13:02

உங்களது கருத்தை வழிமொழிகிறேன் ......


Mohan
நவ 25, 2024 12:52

இவை ஏதும் வெளிநாட்டு சதி என்பது தெள்ள தெளிவாகிவிட்டது .. ஒவ்வொரு முறை கூடும் போதும் இந்த அதானி, மணிப்பூர் பற்றி கிளப்பிவிடுகிறார்கள் போன முறை ஹிண்டேன்பர்க், இதுநாள் வரை கொஞ்சம் அமைதியா இருந்த மணிப்பூர் பாராளுமன்றம் கூடும் போது பார்த்து கிளப்பி விடுகிறார்கள் இதில் காங்கிரஸ், அமெரிக்கா போட்டேன் நிர்வாகம், சீனா போன்ற அந்நிய சக்திகள் பாயிண்ட் எடுத்து குடுத்து ஊதுகுழலான பப்புவை ஆடவைக்கிறார்கள் அவ்ளோதான் வேற ஒன்னும் இல்லை


RAMA
நவ 25, 2024 12:07

கமிஷன் வாங்கியவர்களே விசாரிக்க சொல்கிறார்கள் எனவே நன்றாக விசாரித்து திமுகவை மாட்டி விட வேண்டும். மக்களிடம் இவர்கள் முகத்திரை கிழிய வேண்டும்.


S S
நவ 25, 2024 13:53

முடிந்தால் செய்யுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை