உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொண்டர்கள் தான் பலம்; தேர்தலுக்கு உழையுங்கள்; கட்சியினருக்கு தெம்பூட்டிய கெஜ்ரிவால்!

தொண்டர்கள் தான் பலம்; தேர்தலுக்கு உழையுங்கள்; கட்சியினருக்கு தெம்பூட்டிய கெஜ்ரிவால்!

புதுடில்லி: 'ஆம் ஆத்மி கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் அதிக பலமும், ஆர்வமும் கொண்ட குடும்பமாக மாறிவிட்டனர். சட்டசபை தேர்தலுக்கு இப்போது இருந்து உழைக்க வேண்டும்' என ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தொண்டர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியை வெல்ல எளிய மனிதனுக்கு உதவி செய்யுங்கள். கடந்த 2 ஆண்டுகளில் டில்லி அரசை கவிழ்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த சூழலிலும் மற்ற சக்திகள் வெற்றி பெறக் கூடாது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. ஆனால் எங்கள் கட்சி உடையவில்லை.

நம்பிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் அதிக பலமும், ஆர்வமும் கொண்ட குடும்பமாக மாறிவிட்டனர். அடுத்த சில மாதங்களில், டில்லி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் நம்மைத் தோற்கடிக்க இவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆம் ஆத்மி கட்சி தான் நமது நாட்டிற்கு ஒரே நம்பிக்கை. அடுத்த மூன்று மாதங்களுக்கு வேலையை விட்டுவிட்டு தேர்தலுக்கு உழைக்குமாறு கட்சி தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 08, 2024 21:04

உழைக்கும் தொண்டர்களுக்கு ஒரு சிறு எலும்பு துண்டு. இவர்களுக்கு மற்றவை எல்லாம். இது திமுகவில் கூட உண்டு.


Kumar
நவ 08, 2024 19:45

ஆமாம் தொண்டர்கள் உழைக்க...தலைவர்கள் ஊழலில் கொழிக்க...


MARI KUMAR
நவ 08, 2024 18:58

ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை