வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சில சமூக பகுத்தறிவு இல்லாத மக்களால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. நாட்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் இந்தியாவில் முக்கால்வாசி பிரச்சனை தீரும்.
வெரி bad
புதுடில்லி: அமிர்தசரசில் இருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்க இருந்த போது, பயணி ஒருவர் மற்றொரு பயணியுடன் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து டில்லிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ 454 விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்க இருந்த போது, ஒரு பயணி எழுந்து 2வது பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து 2வது பயணி, விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்தார். வணிக வகுப்பில் இருக்கை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது தெரிந்தது. இதனையடுத்து, அந்த பயணிக்கு மாற்று இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன் பிறகு நிலைமை அமைதியாக, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.டில்லி விமான நிலையத்தில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.