உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் உலக சாதனை... இதுக்கு பேருதான் நிர்வாகம்; பட்டைய கிளப்பிய பவன் கல்யாண்!

ஒரே நாளில் உலக சாதனை... இதுக்கு பேருதான் நிர்வாகம்; பட்டைய கிளப்பிய பவன் கல்யாண்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர அரசு உலக சாதனை படைத்துள்ளது.ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு தேசமும், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி 13,326 பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய நாளில் திட்டமிட்டவாறே கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு தற்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனை உலக சாதனைகளை அங்கீகரிக்கும் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் அங்கீகரித்து உள்ளார். அதற்கான சான்றிதழ், பதக்கத்தை துணை முதல்வர் பவன் கல்யாணிடம் வழங்கி இருக்கிறார்.உலக சாதனை படைத்ததையும், அதனை அங்கீகரித்து வழங்கப்பட்டு உள்ள சான்றிதழையும் துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை காணும் கட்சியினரும், பவன் கல்யாண் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Suthan
செப் 18, 2024 10:56

இங்கும் ஒரு தத்தி நடிகைக்காக கார் ரேஸ் நடத்தி சுகம் கண்டுகொண்டிருக்கு.... மக்கள் பசியில் இருக்கும் போது விண்வெளிக்கு ராக்கெட் எதுக்கு என கேட்ட 200ரூவா ஊபி எங்க இருக்கானுங்களோ ???


Subash.K
செப் 17, 2024 13:03

கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பது தான் உண்மையான சாதனையாக இருக்கும்.


Subash.K
செப் 17, 2024 13:01

கிராம சபை கூட்டம் நடத்துவது முக்கியம் அல்ல.அதில் பேசப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பது தான் மிகவும் முக்கியம்


Ganesun Iyer
செப் 22, 2024 11:21

கல்யாண பத்திரிக்கை குடுக்குற போதே வாழ்த்து சொல்லனும்.. கல்யாணம் முடியட்டும் அப்பறம் வாழ்த்தறேன்னு சொல்ற மாதிரி இருக்கு..


Duruvesan
செப் 17, 2024 05:44

பாஸ் அது மட்டும் இல்ல, பவன் சொல்லி இருக்காரு இனி கோயில்களில் ஹிந்து அல்லாத நீக்கம்னு, அதாவது சனாதன ஒழிப்பு கும்பல் கொட்டை அடிக்க படும்னு


சமூக நல விரும்பி
செப் 16, 2024 22:07

தமிழ் நாட்டில் நம்ம திராவிட மாடல் அரசு செய்யாத சாதனையா. காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் மற்றும் முக்கிய நாட்களில் டாஸ்மாக் இயங்காது. அதனால் அன்று செய்யும் விர்ப்பணையையும் சேர்த்து முதல் நாளே காலேக்ஷன் பார்த்து விடுவர். மாநகர ஓட்டை மாநகர பேருந்தை வைத்து மழை வந்தாலும் அதில் மக்களை ஏற்றி பணம் பார்த்து விடுவார்கள். இதெல்லாம் சாதனை இல்லையா.


M.N. Bindumadhava rao
செப் 16, 2024 21:47

ஆந்திராவின் தலைநகரம் அமராவதி


தமிழ்வேள்
செப் 16, 2024 19:54

இங்கே கூட ஒரு தத்தி கும்பல் எதற்கும் லாயக்கு இல்லாமல் இருக்கிறது... கள்ள குறிச்சி கஷாயம் பெத்து பவுடர் யாவாரம் பண்றதுல ஒலக சாதனை நடத்தும்....ம்ஹும்...


Godfather_Senior
செப் 16, 2024 19:48

வாழ்த்துக்கள், இது ஒரு மிகப்பெரிய சாதனையே


புதிய வீடியோ