புதுடில்லி: லோக்சபா தேர்தலில், இன்று முதல்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. . மணிப்பூர் ஓட்டுச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே.வங்கத்தில் 77.57 % ஓட்டுகள் பதிவாகி உள்ளது. 2 லட்சம் ஓட்டுச்சாவடிகள்
தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உ.பி., (8), ம.பி.,(6), உத்தரகண்ட்(5) , அருணாச்சல்(2), மேகாலயா(2), அந்தமான்(1), மிசோரம்(1), நாகலாந்து(1), புதுச்சேரி(1), சிக்கிம்(1), லட்சத்தீவு(1) தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.இதனைத் தவிர்த்து அசாம், மஹாராஷ்டிராவில் தலா 5, பீஹாரில் 4, மே.வங்கத்தில் 3, மணிப்பூரில் 2 திரிபுரா, காஷ்மீர், சத்தீஸ்கரில் தலா 1 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. 16.63 கோடி வாக்காளர்கள் ஓட்டுப் போட உள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 8 கோடி பேர் தங்களது ஓட்டுரிமையை செலுத்த உள்ளனர். 2 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அருணாச்சல், சிக்கிம் சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.முக்கிய தலைவர்கள்
இன்றைய தேர்தலில், மஹா.,வில் உள்ள நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,அருணாச்சல் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ,கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை,தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்திரராஜன்,தூத்துக்குடியில் தி.மு.க.,வின் கனிமொழி,அசாமின் ஜோர்ஹட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய்,ம.பி.,யின் சிந்திவாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கமல்நாத் மகன் நகுல்அசாமின் திப்ருகர்க் தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனவல்உ.பி.,யின் பிலிபித் தொகுதியில் ஜிதின் பிரசாதாசிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் சிதம்பரம் களமிறங்கி உள்ள முக்கிய தலைவர்கள் ஆவார்கள்.ஓட்டு சதவீதம்
மதியம் 6 மணி நிலவரப்படிதிரிபுரா-76.10 %மே.வங்கம் 77.57 %மணிப்பூர்-68.62 %மேகாலயா-69.91 %அசாம்-70.07%புதுச்சேரி-72.84%சத்தீஸ்கர் 63.41%காஷ்மீர் -65.08%அருணாச்சல் பிரதேசம்-64.07%ம.பி.,-63.25%சிக்கிம்-68.06%நாகலாந்து-56.18%மிசோரம்-53.96%உ.பி.,-57.54%உத்தரகாண்ட்-53.56%அந்தமான் 56.87%மஹாராஷ்டிரா-54.85%லட்சத்தீவு-59.02%ராஜஸ்தான்-50.27%பீஹார்-46.32% ஓட்டுகள் பதிவாகி உள்ளன.துப்பாக்கிச்சூடு
கலவரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மணிப்பூர் மாநிலத்தில் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பியில் உள்ள ஓட்டுச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. பிஷ்ணுப்பூரில், ஓட்டுச்சாவடியை கைப்பற்ற முயன்ற நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.Galleryசட்டசபை தேர்தல்
சிக்கிமில் உள்ள ஒரு லோக்சபா தொகுதியுடன் 32 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலில் 146 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி 52.73 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.