உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் முடிவை பணிவுடன் ஏற்கிறோம்: ராகுல்

மக்கள் முடிவை பணிவுடன் ஏற்கிறோம்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் '', என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.டில்லி சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ., 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த முறையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக எந்த தொகுதிகளிலும் கூட முன்னிலை கூட பெற முடியவில்லை. இது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று் கொள்கிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்த வாக்காளர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாசுபாடு, பணவீக்கம், ஊழலுக்கு எதிராகவும், டில்லியின் வளர்ச்சி மற்றும் மக்களின் உரிமைக்கான காங்கிரசின் போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

மாற்றத்தை விரும்பி

வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா கூறியதாவது: மக்கள் மாற்றத்தை விரும்பி ஓட்டளித்து உள்ளனர். ஆட்சியில் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதத்தால் விரக்தி அடைந்து மாற்றத்தை விரும்பியுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
பிப் 09, 2025 10:45

பப்பு... பிஜெபி கட்சியின் வெற்றிக்கு பொறுப்பேற்று....நீயும் உன் குடும்பமும்.... பப்பு.... பப்பி.... சோனியா.... மூவரும் பதவி விலக வேண்டும்.


பேசும் தமிழன்
பிப் 09, 2025 10:40

பப்பு.... மற்றும் பப்பி.. மக்கள் மறுபடியும் முகத்தில் கரியை பூசி விட்டார்களா.. நீங்கள் வேண்டுமானால் இத்தாலி அல்லது பாகிஸ்தான் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்... அங்கே உங்கள் உறவினர்கள் அதிகம் பேர் உள்ளனர் !!!!


எவர்கிங்
பிப் 09, 2025 08:03

மூன்று முட்டை முடிச்சவிக்கி


எவர்கிங்
பிப் 09, 2025 08:02

கூமுட்டைக்கு பட்டுக் குஞ்சலம்


வாசகர்
பிப் 09, 2025 04:48

EVM மேலே எப்ப பழி போடுவீர்கள்


J.V. Iyer
பிப் 09, 2025 04:38

ராகுல்ஜி, உங்களால்தான் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி. உங்களுக்கு பாஜக மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. நீங்கள் நீண்டகாலம் கான்-க்ராஸ் தலைவராக இருக்க வாழ்த்துக்கள். உங்கள் பணி மகத்தானது.


Rajarajan
பிப் 09, 2025 04:04

அப்படியே எங்க கோரிக்கையை ஏற்று, இத்தாலில குடும்பத்தோட செட்டில் ஆகிடீங்கன்னா புண்ணியமா போகும்.


நரேந்திர பாரதி
பிப் 09, 2025 02:48

இத்தாலிய காங்கிரசின் ஹாட்ரிக் சாதனை பாரீர் 2015-0/70 2020-0/70 2025-0/70


பேசும் தமிழன்
பிப் 09, 2025 10:42

இதெல்லாம் ராகுல் என்ற பப்பு வின் கான்கிராஸ் கட்சி தலைமைக்கு கிடைத்த வெற்றி.... சீ சீ தோல்வி


Nandakumar Naidu.
பிப் 08, 2025 22:32

இவரைப்பற்றி பேசி பயனில்லை, நம்முடைய நேரம்தான் முக்கியம்.


RAJ
பிப் 08, 2025 22:24

என்னமோ விட்டுகுடுத்தமாதிரி சொல்றீரே... இது என்ன வயநாடுனு பகல் கனவு கண்டீரோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை