உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனை நதி நீர்மட்டம் அபாய நிலையிலிருந்து சரிவால் மக்கள் நிம்மதி

யமுனை நதி நீர்மட்டம் அபாய நிலையிலிருந்து சரிவால் மக்கள் நிம்மதி

புதுடில்லி:டில்லியில் பல நாட்களாக அபாய மட்டத்தை தாண்டி பாய்ந்த யமுனை நதி நீர் வெள்ளம் சற்று தணிந்துள்ளது. நேற்று காலை 7:00 மணி நிலவரப்படி, ஒல்டு ரயில்வே பிரிட்ஜ் பகுதியில், 204.50 மீட்டர் அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால், வெள்ள அபாயம் சற்று குறைந்துள்ளது. டில்லியில் பாயும் யமுனை நதிக்கு ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணை மற்றும் வசீராபாத் தடுப்பணைகளில் இருந்து வரும் தண்ணீர் தான் முக்கிய நீராதாரமாக உள்ளது. டில்லி அருகே உள்ள ஓல்டு ரயில்வே பிரிட்ஜ் பகுதியில் பதிவாகும் நீர் அளவு தான், அபாய எச்சரிக்கை, மக்களை கட்டாய வெளியேற்றம் போன்ற நடவடிக்கைகளை முடிவு செய்கிறது. இந்த ஆண்டின் பருவ மழை காலத்தில், மக்கள் கட்டாயமாக வெளியேற்றம் என்ற அளவான 207 மீட்டரை பல முறை தொட்டுள்ளது. இதனால், தாழ்வான கரையோரங்களில் வசித்தவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இப்போது வெள்ளம் படிப்படியாக அபாய மட்டத்தை தாண்டி ஓடிய நிலையில், கடந்த சில நாட்களாக வெள்ள நீர் தணிந்துள்ளது. 204.50 மீட்டர் என்ற அபாய மட்டத்தை தொட்டு ஓடுகிறது. இதனால், வெள்ள பாதிப்பு குறைந்து உள்ளது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை