உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்; மோடி பேட்டி

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்; மோடி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,25) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு கடைசி கூட்டத் தொடர் இது. இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை 75வது அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y7h7863g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கண்ணியம்

பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மக்கள் நம்மை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். விவாதத்தில் அதிகமான எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பார்லிமென்டின் பாரம்பரியம், கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டத்தொடரை சமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆக்கபூர்வமான பார்லிமென்ட் கூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

அதிகார பசி

அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கூட்டத்தொடர் நடப்பது சிறப்பு. பார்லிமென்டில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பேசியதில்லை. அதிகார பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுகின்றனர். கூட்டத்தொடருக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
நவ 25, 2024 17:57

அதிகார பசியை சமசீர் யில்லா கொள்கை வகுத்து காங்கிரஸ் பதவியை தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய இழப்பு நிரந்தரம் அல்ல. தேச விரோதிகள் ஒன்று சேர்ந்து விடுவர். அரசியல் சாசனத்தில் சட்ட, நிர்வாக ஆக்கிரமிப்பு, ஆதிக்க பிரிவுகள் அதிகம். சீர் செய்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது. பல உறுப்பினர்கள் தன் பணி புரியாதவர்கள். நீதிமன்ற நடவடிக்கையை சீர் செய்யாமல், தேர்தல், அரசியல், நிர்வாக அதிகாரத்தை சீர் செய்ய முடியாது. சீரில்லா அதிகாரம் சீரழிவை ஏற்படுத்தும்.


K.n. Dhasarathan
நவ 25, 2024 16:40

அதிகாரப்பசி இருக்கலாம் பிரதமர் அவர்களே ஆணவ பசி இருக்க கூடாது, பாராளுமன்ற கூட்டங்களுக்கு நீங்கள் முதலில் தினமும் வருவதை உறுதி செயுங்கள், வந்தாலும் முழுதும் அமர்ந்து, கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள், திரிணாமுல் எம் .பி மஹுவா மொய்த்றி பேசும் பொது கடந்த முறை போல ஓட்டம் பிடிக்காமல், குறிப்பாக, பேசுவதை உள்வாங்குங்கள். பாராளுமன்ற விவகார அமைச்சர் முன்புபோல மைக் ஆப் செய்வதை விடுங்கள், எவ்வளவோ அருமையான பேச்சாளர்கள், பேசுவதை காத்து கொடுத்து கேளுங்கள். அந்த பொறுமை இருக்கிறதா ? சபை நன்றாக நடக்க ஒத்துழைப்பு கொடுங்கள், ஆள்கள் இல்லாத நேரம் பார்த்து தீர்மானம் நிறைவேற்றும் மட்டமான போக்கை கைவிடுங்கள்.


ஆரூர் ரங்
நவ 25, 2024 21:02

காசுக்கு விலை போய் கேள்வி எழுப்பினா பிரதமர் ஏன் மதிக்கணும்


பல்லவி
நவ 25, 2024 16:08

வயநாட்டில் சம்பவம் செய்த மக்கள் போல்


முருகன்
நவ 25, 2024 11:32

ஜார்க்கண்ட் ல் மாதிரி


முக்கிய வீடியோ