வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அப்போ இவ்வளவு நாளா மக்களை ஓட்டாண்டி ஆக்கியது நீங்கள் தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே
மக்கள் கைகளில் எல்லாம் புரள வில்லை கள்ள வியாபாரிகள் கைகளிலும், வரிகள் மூலம் கள்ள கஜானவிலும் மட்டும்தான் பணம் உருள்கிறது புரள்கிறது புளங்காங்கிதம் அடைகிறதாம்
டிரம்ப் ஆப்பு வெச்ச பிறகு தான் நீங்க பாட்ட மாற்றி பாடுறீங்க
ம்ம்.. நம்புங்கள் மக்களே
சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சூப்பர் மார்க்கெட்,சாப்பாடு ஹோட்டல்கள், வீடு பொருள் விற்பனை, வீடு வன்பொருள் ஹார்ட்வர் கடைகள் அனைத்தும் 15 நாட்கள் முன்பே பொருட்களின் விலையை கூட்டி விற்பனையை ஆரம்பித்து விட்டனர், தமிழக மக்களுக்கு GST வரி குறைப்பால் பலன் 100% இல்லை. கடந்த 30 நாட்கள் நான் செலவழித்த பணத்திற்கான ரசீதை வைத்து கம்பேர் பண்ணி எழுதுகிறேன். இங்கு அட்டாச்மென்ட் வசதி இருந்தால் 20 நாட்களுக்கு முன் உள்ள ரசீதையும் இன்றய தேதியில் அதே கடையில் சுமார் 10-15 சதவிகிதம் ஹோட்டல் உணவு மற்றும் சூப்பர் மார்க்கெட் விலைகள் எறியுள்ளது. இதை எத்தனை பேர் நோட் செய்து உள்ளீர்கள்? தமிழக வியாபாரிகள் கொள்ளையர்கள் என நிரூபணம் ஆகியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களின் விலை உயர்வு லூட்டி தாங்கமுடியவில்லை.
உங்களுக்கு 40 ஆயிரம் வட்டி வந்தா 3 ஆயிரம் வங்கி பிடிக்கும்
ஏற்கனவே 8 வருடம் கற கற என்று கறந்து விட்டு அவர் ஷர்ட் இல் பையே இல்லாத அளவுக்கு செய்து விட்டு , உங்களை அமெரிக்கன் மிரட்டினான் நீங்கள் அதிக வரி விதிக்கிறீகள் என்று கேட்கவே குறைத்து விட்டு , அதுவும் எங்கே வியாபாரி அடக்க விலையை ஏற்றி விட்டான் , 100 பொருள் 12 % 112 அனால் இப்போ வியாபாரி 5 % ஆக குறைந்தவுடன் VALUE 106 என்று ஆகி அதே 112 தான் மக்கள் கொடுக்கும் நிலை , இந்த அடக்க விலை யார் கண்காணிப்பது
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதங்களை உயர்த்த கேட்டு குரல் கொடுத்து, தீர்மானங்களுக்கு தலையாட்டி விட்டு இப்போ அதிக வரி வருமான பங்கீடு கேட்கும் தங்கம் தென்னரசுவிடம் கூறிப் பாருங்க. இரட்டை வேடம்.
இதை ஐந்து வருடங்கள் முன்பு செய்து இருந்தால் மக்களிடம் இன்னும் அதிகமாக பணப்புழக்கம் இருந்து இருக்குமே மேடம்!
ஆனா பாதைகள், மேம்பாலங்கள், இத்தனை ரயில் வசதிகள் இருந்திருக்காதே சார்
பெட்ரோல் விலையை ஏன் குறைக்க வில்லை என்று கேட்டாலும் இதே கதையை தான் சொல்கிறீர்கள், இப்போது ஜி எஸ் டி வரி குறைப்புக்கும் இதே கதை தானா? ஏன் 2014 க்கு முன்பு சாலைகள் பாலங்கள் ரயில்வே லைன்கள் எல்லாம் அமைக்கப்பட வில்லையா?
5 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால் இலவச தடுப்பூசிகள், இலவச ரேஷன்க்கு நிதியிருந்திருக்காது . பாதி இந்தியர்கள் இறந்திருப்பார்கள்.
ஏற்கனவே மக்கள் கைகளில் பணம் புரள்வதால், நைட் மூன்றுமணிக்கு கூட பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த லட்சணத்தில் நிர்மலா ஜிஎஸ்டியை வேறு பத்து சதவீதத்திற்கு மேல் குறைத்துவிட்டார். மக்களின் அலப்பறையை கையால் பிடிக்க முடியாது.
சரி, உங்க வீட்ல வந்து விருந்து சாப்பிடுறோம்,
ஆமாம் மேடம் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் கரை புரண்டு சிதறது .
மக்கள் கையில் காசு புரளக் கூடாது என்பது தானே திராவிட கொள்கை. உடனே ஏதாவது ஒரு வரியோ அல்லது கட்டணங்களை உயர்த்தியோ அல்லது பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் என்று உயர்த்தி திமுக அரசு பிடுங்கி கொள்ளுமே !!!
செலவை குறைத்தால் நிறைய பணம் புரளும் .மக்களுக்கு இது புரிவதில்லை