உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷங்க் ஏர் நிறுவனத்தின் விமான சேவைக்கு அனுமதி

ஷங்க் ஏர் நிறுவனத்தின் விமான சேவைக்கு அனுமதி

புதுடில்லி:புதிய விமான நிறுவனமான 'ஷங்க் ஏர்', நாடு முழுவதும் விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. இளம் தொழிலதிபர் ஷர்வன் கே.விஸ்வகர்மாவின் தலைமையிலான ஷங்க் ஏர் நிறுவனம், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து புதிய விமான சேவையை துவங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையிடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியா முழுதும் உள்ள முக்கிய நகரங்களை இணைப்பதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் எனவும், அதிக விமான சேவைக்கு தேவை உள்ள பகுதிகள், குறைந்த விமானங்கள் இயக்கப்படும் உள்நாட்டு பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விமான போக்குவரத்து துறையின் அனுமதி, மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த முதல் விமான நிறுவனம் ஷங்க் ஏர் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Easwar Moorthy
செப் 25, 2024 07:27

பெரிய நிறுவனங்களுக்கு பெயர் சூட்டும் போது அதன் உச்சரிப்பு ஆங்கில மொழியில் எப்படி வருகிறது என சரி பார்க்க வேண்டும். சங் என்பதற்கு மூழ்கியது என்றும் பொருள் உண்டு.


Rajan
செப் 25, 2024 05:38

சீக்கிரம் யாராவது துவங்கினால் தான் இப்ப இருக்கிற நெரிசலை குறைக்க முடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை