உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருணை கொலைக்கு அனுமதி : கர்நாடக அரசு அதிரடி முடிவு

கருணை கொலைக்கு அனுமதி : கர்நாடக அரசு அதிரடி முடிவு

பெங்களூரு :தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.'குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது. சட்டப்பிரிவு, 21ன் கீழ், அவர்களுக்கு இந்த உரிமை உள்ளது' என, 2018ல், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விதிமுறை

கடந்த, 2023ல் இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, முந்தையை உத்தரவில் சில மாற்றங்கள் செய்து, இதற்கான விதிமுறைகளை எளிதாக்கியது.கண்ணியமான மரணத்துக்கான உரிமை தொடர்பான விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து, கருணை கொலைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத் துறை நேற்று அனுமதி அளித்து உள்ளது. அதன் விபரம்:தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்யும்படி குடும்பத்தினர் கேட்டு கொண்டால், கருணை கொலை செய்வது தொடர்பான அறிக்கை அளிக்க முதன்மை, இரண்டாம் நிலை என இரண்டு மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். இந்த இரண்டு குழுக்களிலும் ஒரு அரசு டாக்டர் இருப்பார்.முதன்மை குழு, நோயாளியின் உடல்நிலையை நன்கு பரிசோதிக்கும். சிகிச்சை அளித்தாலும் அவரது உடல்நிலை தேறாது என்று உறுதியாகும் பட்சத்தில், அதுதொடர்பாக அறிக்கை தயாரித்து, இரண்டாம் நிலை மருத்துவ குழுவிடம் கொடுக்கும். அந்த குழு அறிக்கையை நன்கு ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் நோயாளி கருணை கொலை செய்யப்படுவார். அரசின் இந்த உத்தரவு, கோமா நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு

இது குறித்து, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவின், 'எக்ஸ்' வலைதள பதிவு:தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனுமதி வழங்கி, கர்நாடக சுகாதாரத் துறை வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவு பல குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும். கண்ணியமான மரணத்தை விரும்புவோருக்கு பயன் அளிக்கும். சமூகத்திற்காக தாராளமய மற்றும் சமமான மதிப்புகளை நிலைநிறுத்த எங்கள் அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 01, 2025 11:36

இதில் மிகப்பெரிய ஆபத்து. வீட்டில் முதியவர்கள் இருந்தால் டாக்டரிடம் சென்று சர்டிபிகேட் வாங்கி கொல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.


premprakash
பிப் 01, 2025 09:16

இது நம்ம நாட்டுக்கு தேவை இல்லாத வேலை. நம்ம ஊரு கலாச்சாரம் என்ன. கடைசி காலத்தில் மருத்துவ வசதி நிறுத்தி விடுவார்கள். உணவு கொடுப்பதையும் நிறுத்தி விடுவார்கள். ரெண்டு மூணு நாளில் உயிர் பிரிந்து விடும்.


Raj
பிப் 01, 2025 07:27

நல்லது ஆனால் கருணை கொலை என்ற வார்த்தையை மாற்றி "கண்ணிய மரணம் " என்று வைக்கலாம், காரணம் கொலை என்ற வார்த்தையே குற்ற சொல் தான். அது அந்த குடும்பத்திற்கும் மன வருத்தத்தை கொடுக்கும் வாழ்நாள் முழுவதும்.


B.V. Prakash
பிப் 01, 2025 05:14

வரவேற்கிறேன்.


Priyan Vadanad
பிப் 01, 2025 03:12

கருணை கொலை, அதாவது Mercy Killing, என்று சொல்லுவதைக் Painless Death, அதாவது வலியில்லா மரணம் என்று பெயரிட்டால் நல்லது. கொலை என்று சொன்னாலே ஒரு குற்ற உணர்வு வருகிறது. அது இரக்க கொலை என்றாலும் உண்மை. கர்நாடகா அரசு சரியான முடிவையே எடுத்திருக்கிறது என்று நினைக்கிறன்.


Thiru, Coimbatore
பிப் 01, 2025 00:29

நிச்சயமாக நல்ல முடிவு இது. வலியின் கொடூரமான பிடியில் இருந்து விடுதலை வலியில்லாமல் கிடைக்கும


Bye Pass
பிப் 01, 2025 00:17

200 உப்பிஸ் இதில் அடங்குவார்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை