உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருந்தின் பக்க விளைவு கோரிய மனு தள்ளுபடி

மருந்தின் பக்க விளைவு கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் குறித்து, அந்த மருந்துச் சீட்டிலேயே எழுதும்படி உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.மனுவை நிராகரித்து அமர்வு கூறியுள்ளதாவது: இது சாத்தியமில்லாததது. அப்படி செய்தால், டாக்டர்களுக்கு அதிக வேலை பளு ஏற்படும்; குறைந்த நோயாளிகளையே பார்க்க முடியும். மேலும், நுகர்வோர் நீதிமன்றத்தில் தேவையில்லாமல் அதிக வழக்குகள் தாக்கல் செய்யும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 11:26

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். டாக்டர் பரிந்துரைப்படி மருந்து சாப்பிட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் காய்ச்சலுக்கு டாக்டர் பார்த்து டோலோ சாப்பிட்டார் என்பதற்காக நாமும் டோலோ சாப்பிட்டால் பக்கவிளைவுகள் கண்டிப்பாக இருக்கும்.


Rajamani K
நவ 15, 2024 09:55

டாக்டர்களுக்கு, மருந்து எதற்காக என்று சரியாகத் தெரிந்தால் போதும். இப்போதுள்ள தகவல் தொழில் நுட்பத்தில், பாக்க விளைவுகள் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். ஒன்று நிச்சயம் .. பக்க விளைவு இல்லாத ஆங்கில மருந்துகளே கிடையாது.


ஆரூர் ரங்
நவ 15, 2024 11:47

நாட்டு மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு (ஆங்கில மருத்துவம் என்று ஒன்றைஇந்தியாவுக்கு வெளியே யாருக்குமே தெரியாது. நவீன மருத்துவம் என்றே அழைக்கின்றனர். )


அப்பாவி
நவ 15, 2024 05:05

அதான பாத்தேன். எதையாவது மருந்துன்னு எழுதிக் குடுத்து வாங்கி சாப்புட்டு செத்தால் டாக்டர் பொறுபாக மாட்டார். அவர் நீட் எழுதி பாஸ் பண்ணி டாக்டரானவர்.


Kasimani Baskaran
நவ 15, 2024 04:59

பல மருந்துகளுக்கு பக்க விளைவுகள் ஆபத்தானவை. மூட்டு வழியை மறைக்க ஒரு வித மருந்து கொடுக்கப்படுகிறது. இதய நோய் பாதிப்புள்ளவர்கள் அதை எடுத்துக்கொண்டால் மூட்டுவலி நோயாளி மரணமடைய வாய்ப்பிருக்கிறது. இது லட்சத்தில் ஒருவருக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. எந்த மருந்தை புதிதாக எடுத்துக்கொண்டாலும் இணையத்தில் அதனைப்பற்றி தெரிந்து கொண்டு எடுப்பதே நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை