உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு: தள்ளுபடி செய்தது டில்லி உயர்நீதிமன்றம்

பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு: தள்ளுபடி செய்தது டில்லி உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த ஏப்.,21ல் ராஜஸ்தானில் நடந்த பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, ''ஹிந்துக்களின் வளங்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு காங்கிரஸ் வழங்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க உள்ளது'' எனப் பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் தரப்பில் இந்திய தேர்தல் கமிஷனில் புகாரளிக்கப்பட்டது. ஆனாலும், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் தேர்தல் கமிஷன் இதுவரை எடுக்கவில்லை. எனவே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று (மே 13) விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த விவகாரத்தில் பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அக்கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''மனுதாரரின் புகாரை சட்டத்தின்படி சுயாதீனமாக மதிப்பிட தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Syed ghouse basha
மே 13, 2024 20:27

மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம் கங்கையே சூதகம் ஆனால் எங்கே சென்று குளிப்பது?


என்றும் இந்தியன்
மே 13, 2024 17:48

வழக்கை தள்ளுபடி செய்யுமுன் அந்த வழக்கை தாக்கல் செய்தவனின் பின்னணியை நன்கு விசாரித்து அவனை இந்திய குடிமகன் என்பதை நீக்கவேண்டும் அவனுக்கு அபராதம் விதிக்கவேண்டும்


Lion Drsekar
மே 13, 2024 16:35

அடுத்து உச்ச நீதி மன்றம் இருக்கிறதே ? வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்


J.V. Iyer
மே 13, 2024 16:31

எப்போதும் நீதியை விலைக்கு வாங்கமுடியாது என்று தெரிகிறது


Ramanujadasan
மே 13, 2024 16:29

சும்மா வழக்கு தொடர்ந்தால் தள்ளுபடி மட்டும் செய்ய கூடாது ,அதிக அபராதமும் விதிக்க பட வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி