உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல நிறுவன மருந்து, மாத்திரைகளில் போலி; ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிரபல நிறுவன மருந்து, மாத்திரைகளில் போலி; ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாராசிட்டமால் உள்ளிட்ட 53 முன்னணி மருந்து மற்றும் மாத்திரைகள் தரம் தொடர்பான சோதனையில் வெற்றி பெறாத நிலையில், போலி மருந்துகளால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக முன்னணி நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன. மருந்துகளின் தரம் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளால் மாதாந்திர சோதனை நடத்தப்பட்டது. அதில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிட்டமால் உள்பட 53 மருந்துகள் தரமில்லாமல் இருந்ததாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தெரிய வந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி ஷாப்ட்ஜெல்ஸ், ஆன்டியாசிட் பான்-டி, பாராசிட்டம்மல் ஐ.பி., 500 எம்.ஜி., ஆன்டி- டையபெட்டிக் மருந்தான கிளிம்பிரைடு, உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்து டெல்மிஷார்டன் உள்ளிட்ட 53 முன்னணி மருந்துகள் தரம் தொடர்பான ஆய்வில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும், ஹெட்டரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் லிமிடெட், கர்நாடகா ஆன்டிபயோடிக்ஸ் & பார்மாசியூட்டிகல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக, ஷெல்கால் மாத்திரிக்கைகள், உத்தரகாண்ட்டைச் சேர்ந்த ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து டோரன்ட் பார்மாசியூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் பரிசோதனையில் தோல்வியையே சந்தித்தன. கர்நாடகாவைச் சேர்ந்த ஆன்டி பயோடிக்ஸ் & பார்மாசியூட்டிகல்ஸ் தயாரிப்புகளான பாராசிட்டமால் மாத்திரைகளும் கூட தர பரிசோதனையில் வெற்றி பெறவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பிய போது, 'அவை போலியான மாத்திரைகள்' என்றும், 'தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்ல' என்றும் கூறுகின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் மத்தியில் நன்மதிப்புடன் செயல்பட்டு வரும் தங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு, இதுபோன்ற போலி மருந்து, மாத்திரைகளின் மூலமாக அவப்பெயர் ஏற்படுவதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன. மேலும், போலி மருந்துகளை தயாரித்து விற்பவர்களை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்து எனக் கூறி, 156 மருந்துகளை இந்திய சந்தைகளில் விற்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Guna Gkrv
செப் 26, 2024 06:48

எப்படி செய்யமுடியும் செய்வதே அரசியல் வாதிதான் அப்புறம் எப்படி அவர்களை பிடிக்கமுடியும், அப்படியே பிடித்தாலும் நீதி மன்றத்திலிருந்து வழக்கிலிருந்து தப்பி விடுவார்கள் தப்பவைத்து விடுவார்கள்.


Sivagiri
செப் 26, 2024 00:26

அரசு மருத்துவமனைகளில் இருந்து , மாத்திரைகள் டானிக்குகள் , எக்ஸ்ரே பிலிம்கள் முதலுதவி பொருட்கள் , என எல்லாமே கடத்த பட்டு ,, வேறு கம்பெனி பெயர்களால் பேக்கிங் செய்யப்பட்டு , மக்களுக்கே விற்கப்படுவது சாதாரணமாக நடக்கிறது . . .


kannan
செப் 25, 2024 22:19

மனிதனின் உயிரை எடுக்கும் இந்த மருந்து தயாரிப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியானது


Ramesh Sargam
செப் 25, 2024 22:13

மக்கள் உயிர் காக்கும் மருந்துகளில் கலப்படம் செய்பவர்களை பிடித்து நடுத்தெருவில் மக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ளவேண்டும்.


spr
செப் 25, 2024 22:01

உயிர் காக்கும் மருந்துகள், உணவுப்பொருட்கள், இவற்றில் கலப்படம் செய்வோர், கற்பழிப்பு மற்றும் கொலைக்கு குற்றம் புரிவோர், திட்டமிட்டு கொலை செய்வோர் இவர்களுக்கு எந்த விதத்திலும் கருணை காட்டாமல், மரண தண்டனை விதிக்க வேண்டும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, எக்காலத்திலும் அவர்களோ அவர்களின் வாரிசுகள் பயன்படுத்த முடியாமல் அரசுடைமையாக்க வேண்டும் அவர்களின் பினாமிகள் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் சமூகம் அவர்களை விலக்கி வைக்க வேண்டும் அது போல ஆகாதவரை இந்தக் குற்றங்கள் குறையாது அவசியமானால் மோடி அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் நீதிமன்றங்கள் அமுல்படுத்த வேண்டும் கனவுதான் என்றாலும் எதிர்பார்ப்போம்


R S BALA
செப் 25, 2024 21:37

இதெல்லாம் மீறி இந்த போலி மருந்துகளை உட்கொண்டு நாம் உயிருடன் வாழ்வது அந்த தெய்வத்தின் கருணையால்தான்..


ஆரூர் ரங்
செப் 25, 2024 21:30

கூர்ந்து கவனியுங்கள். இந்த பட்டியலில் ஒரேயொரு அன்னிய பெருநிறுவனமும் இல்லை. உலகத்திலேயே அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெயரைக் கெடுக்க சதி .


ஆசைத்தம்பி
செப் 25, 2024 21:29

ஹி...ஹி...ஹி...இந்தியாவுல எல்லாமே விலைக்குறைவு. நாமதான் வல்லரசு.பேரரசு.


Rajamani K
செப் 25, 2024 21:19

ஜன அவுஷதி மருந்துகள் தரமானவையா? எனது அனுபவம் சரியே. 3 மாதம் ஒருமுறை லேப் டெஸ்ட் சீராக உள்ளது. பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். பிரோஸ்ட்ரேட் க்கான ஒரு மாத்திரை 10 க்கு 255 ரூபாய். அதே மாத்திரை யின் ஜெனிரிக் ஜன அவுஷதியில் 10 க்கு ரூபாய் 85. மூன்று மடங்கு kuraivu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை