உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி வீட்டில் பணக் குவியல்: உறுதி செய்தது விசாரணை குழு

நீதிபதி வீட்டில் பணக் குவியல்: உறுதி செய்தது விசாரணை குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணக் குவியல் இருந்ததை, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மூன்று பேர் விசாரணை குழு உறுதி செய்துள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில், மூட்டை மூட்டையாக பணக் குவியல் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மூன்று பேர் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் அடங்கிய இந்தக் குழு, தன் அறிக்கையை, கடந்த, 3ம் தேதி சமர்ப்பித்தது.பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணை, கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணக் குவியல் இருந்ததை, இந்தக் குழு உறுதி செய்துள்ளது.தற்போது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மாவுக்கு எந்தப் பணியும் ஒதுக்கப்படவில்லை. தன் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, நீதிபதி பதவியில் இருந்து யஷ்வந்த் வர்மாவை விலகும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள மற்ற மூத்த நீதிபதிகளிடமும், தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வரும், 13ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rama Krishnan
மே 08, 2025 15:01

ஆளுக்கொரு சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வெறும் எழுத்தில் தான்.


ஆரூர் ரங்
மே 08, 2025 14:38

13 ம் தேதி ரிடையர்டு ஆகும் போது ராஜினாமா செய்வார். கடிதம் நான்கு நாட்களுக்குப் பிறகு தலைமை நீதிபதிக்குப் போகும். அத்துடன் ஊற்றி மூடப்படும்?


Raghavan
மே 08, 2025 11:39

கொலிஜியத்தை முதலில் ஒழிக்கவேண்டும். தேர்வு வைத்து நீதிபதிகளை நியமிக்கவேண்டும்.


sankaranarayanan
மே 08, 2025 11:17

சாதாரண குடிமகனுக்கு நடக்கும் விதியையே இவனுக்கும் பின்பற்றி இவனை கடுங்காவலில் வைக்க வேண்டும் இவன் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்து இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் இது ஒரு பாடமாக மற்ற எல்லா நீதிபதிகளுக்கும் பொருந்தும்


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 08, 2025 12:29

அமலில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி இவர் மீது எப்படி நடவடிக்கை பாயுமாம். போலீஸ் FIR போட முடியாது. வரும் பதிமூன்றாம் தேதி பணி ஓய்வு பெற்று வழியனுப்பு விழா நடத்தி அனைவர் பாராட்டு புகழுரைகளையும் அதோடு பணிக்கொடை பலன்களையும் முழுமையாக அன்றைக்கே பட்டுவாடா செய்வதுதான் நடைமுறையில் உள்ளது. ஊருக்கெல்லாம் உள்ள இன்னொரு சட்ட திட்டங்கள் வர்மாவுக்குப் பொருந்தாது புரிஞ்சுக்கோங்க.


R K Raman
மே 08, 2025 11:07

இவர் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அரசு வக்கீல். இந்தப் பணம் கட்சிப் பணமா இருக்குமா?


Varadarajan Nagarajan
மே 08, 2025 11:01

"அரசு அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும்" என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. இந்த நீதிபதிக்கு என்னதான் அரவணைப்பு இருந்தாலும் இவர் ஊரில் இல்லாதபோது ஏற்பட்ட தீவிபத்தின்காரணமாக இவரது நடவடிக்கைகளை தெய்வம் வெளிகொணர்ந்து விட்டது. இனி தண்டனை மட்டுமே பாக்கி


மொட்டை தாசன்...
மே 08, 2025 10:22

உறுதி செய்து என்ன பலன்? "பணம் முழுவதும் எரிந்துவிட்டதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" இப்படித்தான் தீர்ப்பு வரும்.


S.V.Srinivasan
மே 08, 2025 10:12

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்தாரு, ஆனா உண்மை வெளி வந்து விட்டது. நீதி துறை மீது சாமானியர்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.


Venkatesan Srinivasan
மே 08, 2025 10:04

குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தங்கர் குறிப்பிட்டது போல ஏன் இதுவரை போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. வருமான வரித்துறை, அமலாக்க துறை விசாரணை மேற்கொள்ளவில்லை. ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தால் அதை விசாரிக்கும் நீதிமன்றம் கூட விசாரணையை போலீஸை கொண்டு நடத்துகிறது. இதிலும் அத்தகைய பாரபட்சம் அற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்போம்.


Nellai tamilan
மே 08, 2025 09:38

கடந்த பத்து ஆண்டுகளில் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகளின் இலட்சணம் தெரிந்து விட்டது. அதிக தகுதியுடையவர்களை மட்டுமே நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் கொலிஜியம் இந்த தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நேர்மையான நியாயமான நீதிபதிகள் தேர்வுமுறை மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். கட்டப்பஞ்சாயத்து முறையில் இருந்து இந்தியா வெளியே வர வேண்டும்.


Kannan
மே 08, 2025 10:51

கொலிஜியம் முறை அகற்றப்பட்டு தகுந்த மாற்று முறையில் நீதிபதி தேர்வு நடத்த வேண்டும். ஊழல் செய்த இந்த நீதிபதி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.