உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரா கிளைடிங் விபத்தில் விமானி பலி

பாரா கிளைடிங் விபத்தில் விமானி பலி

சிம்லா: பாராகிளைடிங் விபத்தில் சி்க்கிய சம்பவத்தில் விமானி ஒருவர் பலியானார்.இமாச்சல் பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தில் உள்ள பிர்பில்லிங் என்னுமிடத்தில் டேண்டம் பாரா கிளைடர் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுடபக்கோளாறு ஏற்பட்டு விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் விமானி ஒருவர் பலியானார். அவருடன் சென்ற சுற்றுலா பயணி காயம் அடைந்தார். இது குறித்து பிர்பில்லிங் பாராகிளைடிங் சங்க அதிகாரிகள் கூறியதாவது: பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்தில் சி்க்கியது. இச்சம்பவத்தில் மண்டி மாவட்டம் பரோட் பகுதியை சேர்ந்த வ விமானி மோகன் சிங் என்பவரும் சுற்றுலா பயணியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விமானி மோகன்சிங் உயிரிழந்தார். சுற்றுலா பயணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறுகளால் அல்லது வானிலை தொடர்பான காரணங்களால் ஏற்பட்டதா என ஆராயப்பட்டு வருகிறது. காங்ரா மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு அதிகாரி வினய் குமார் கூறுகையில் பணியில் இருந்த மார்ஷல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்களிடமிருந்து விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் கோரப்பட்டுள்ளன.'விசாரணை அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ