உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சார பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சார்ஜிங் பாயின்ட்களை உயர்த்த திட்டம்

மின்சார பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சார்ஜிங் பாயின்ட்களை உயர்த்த திட்டம்

பெங்களூரு: மின்சாரத்தால் இயங்கும் பஸ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கு ஏற்றாற்போன்று, 'சார்ஜிங் பாயின்ட்'களை அமைக்க, பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுதொடர்பாக, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:பெங்களூரில் காற்று மாசை குறைப்பதுடன், பயணியருக்கு சிறப்பான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மின்சார பஸ்களை இயக்குகிறது. இந்த பஸ்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மின்சார பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.பி.எம்டி.சி., டீசல் பஸ்களுக்கு, நிர்வகிப்பு செலவு உட்பட ஒவ்வொரு கி.மீ.,க்கும் 87 ரூபாய் செலவிடுகிறது. ஆனால் மின்சார பஸ்களுக்கு கி.மீ.,க்கு 54 ரூபாய் செலவாகிறது. பி.எம்.டி.சி.,க்கு 1 கி.மீ.,க்கு, 33 ரூபாய் மிச்சமாகிறது. ஒரு பஸ் தினமும் 100 முதல் 150 கி.மீ., இயக்கப்படுகிறது.மின்சார பஸ்கள் 1 யூனிட்டுக்கு, 1 கி.மீ., செல்கிறது. ஒரு யூனிட்டுக்கு ஏழு ரூபாய் மட்டுமே செலவாகிறது. தினமும் ஒரு இ.வி., பஸ், இயங்க அதிகபட்சம் 200 யூனிட் மின்சாரம் பயன்படுகிறது. 1,027 மின்சார பஸ்கள் இயங்குவதால், பி.எம்.டி.சி.,க்கு 56,000 லிட்டர் டீசல் மிச்சமாகிறது. சுற்றுச்சூழலும் மாசுபடுவதில்லை. எனவே டீசல் பஸ்களுக்கு பதிலாக, மின்சார பஸ்களை இயக்குவதில் பி.எம்.டி.சி., ஆர்வம் காட்டுகிறது.நகரில் ஏற்கனவே 1,027 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்காக பி.எம்.டி.சி., 14 பணிமனைகளில், இ.வி., சார்ஜிங் ஸ்டேஷன்களை திறந்துள்ளது. வழியில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதால், கூடுதல் சார்ஜிங் ஸ்டேஷன்களும் திறக்கப்பட்டு உள்ளன.மெஜஸ்டிக், யஷ்வந்த்பூர், பசவநகர், சென்ட்ரல் சில்க் போர்டு, ஹொஸ்கோட், கலாசிபாளையா, சிவாஜிநகர், பி.டி.எம்., பஸ் நிலையம், பன்னரகட்டா டி.டி.எம்.சி., ஹெப்பால், மல்லசந்திராவில், உயர் தரமான சார்ஜிங் பாயின்ட்கள் நிறுவப்பட்டுள்ளன.ஒப்பந்த நிறுவனங்களான டாடா மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனங்களே, சார்ஜிங் பாயின்ட்களை நிறுவியுள்ளன. சார்ஜிங் பாயின்ட்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டும், பி.எம்.டி.சி., செய்கிறது. வேறு எந்த செலவும் செய்யவில்லை.சார்ஜிங் சென்டர்கள் அமைப்பது, நிர்வகிக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுள்ளன. மின்சார பஸ்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, சார்ஜிங் பாயின்ட்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பி.எம்.டி.சி., நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை