உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளாஸ்டிக் கழிவு எரித்த சம்பவம்; போலீசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

பிளாஸ்டிக் கழிவு எரித்த சம்பவம்; போலீசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது மண்ணார்க்காடு. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், கடந்த, 9ம் தேதி பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதாக நகராட்சிக்கு புகார் வந்தது.நகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரித்தபோது, புகார் உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இது குறித்து நகராட்சி செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:நகராட்சி அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சென்று, கழிவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து வகுப்புகள் நடத்தியுள்ளனர். அனைத்து நிறுவனங்களிலிருந்தும் நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப்படுகிறது.இருந்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு எரிக்கப்பட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக கழிவுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை