உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிறந்த நாளன்று மயங்கி விழுந்து பலியான பிளஸ் 2 மாணவி

பிறந்த நாளன்று மயங்கி விழுந்து பலியான பிளஸ் 2 மாணவி

பாலக்காடு; பாலக்காடு அருகே, பிறந்த நாளன்று, 17 வயது சிறுமி மயங்கி விழுந்து இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பொய்ப்புள்ளி பகுதியை சேர்ந்த ராஜனின் மகள் ஸ்ரேயா, 17. இவர், வீட்டின் அருகே உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.இந்நிலையில், பிறந்த நாளான நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டில் இருந்த ஸ்ரேயா திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரியும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saravan Ravichandran
ஜூன் 18, 2025 09:01

பெற்றோர்கள் compare பண்ணாங்கன்னு எங்கேயுமே சொல்லலே. முதலில் நாம் assume செய்வதை நிறுத்த வேண்டும். அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் உடல் உபாசீனம் இருந்து இருக்கலாம்.


Bahurudeen Ali Ahamed
ஜூன் 16, 2025 11:35

மிகவும் வருத்தமான செய்தி, பெற்றோர்களே தயவுசெய்து குழந்தைகள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள் படிப்பு முக்கியம்தான் ஆனால் மற்ற குழந்தைகளை வைத்து கம்பேர் செய்து படிப்பிலோ அல்லது மற்ற விஷயங்களிலோ அழுத்தம் கொடுக்காதீர்கள், காலை உணவுகளை தவிர்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை