உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் அறிமுகம்; கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் அறிமுகம்; கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மாருதி சுசூகியின் முதல் மின்சார காரை நேற்று கொடி அசைத்து பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி முதல் முறையாக மின்சார கார் தயாரித்துள்ளது. இ-விடாரா என்ற பெயரில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த கார்களின் அறிமுக விழா, குஜராத் மாநிலம் ஆமதாபாத் அடுத்த ஹன்சல்பூரில் நேற்று நடந்தது.பிரதமர் மோடி, கொடி அசைத்து புதிய வாகனத்தின் பயணத்தை தொடங்கி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i43j8jji&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வாகனங்கள், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட அனைத்து முன்னேறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். குஜராத் மாநிலத்தில் டிடிஎஸ் லித்தியம் அயன் பேட்டரி ஆலையில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு தயாரிப்பு பணியையும் மோடி தொடங்கி வைத்தார்.இந்த ஆலை, தோஷிபா, டென்சோ மற்றும் சுசூகி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் 80 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.

100 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சக்தி ஜனநாயகம். இங்கு அதிக திறமை உடையவர்கள் உள்ளனர். இதனால் அனைத்து இக்கட்டான சூழல்களிலும் நாம் வெற்றி அடைய முடிகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார கார்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு சிறப்புவாய்ந்த நாள். ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்தி, ஜப்பானுக்கே ஏற்றுமதி செய்ய உள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும்.

200 சதவீதம் வளர்ச்சி

சுசூகி நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரித்து ஜப்பான், ஐரோப்பா உட்பட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியா செமி கண்டக்டர் துறையில் தனது பாய்ச்சலை தொடங்கி உள்ளது. எதிர்கால தேவைக்கு ஏற்ற தொழிலல்துறையில் இந்தியா கவனம் செலுத்தும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உற்பத்தி துறையில் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மொபைல் போன் உற்பத்தி துறையில் 2,700 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 200 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

தாரக மந்திரம்

அனைத்து மாநிலங்களும் சீர்திருத்தங்களை போட்டியிட்டு அமல் செய்ய வேண்டும். வளர்ச்சிக்கு உகந்த கொள்கைகளையும், சிறந்த நிர்வாகத்தையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 'மேக் இன் இந்தியா' யாத்திரையில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள். உலகுக்காக உற்பத்தி செய்யுங்கள் என்பதே நமது தாரக மந்திரம். 13 ஆண்டுகளுக்கு முன் நான் குஜராத் முதல்வராக இருந்த போது மாருதி சுசூகி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கி கொடுத்தேன். மேக் இன் இந்தியா முயற்சி ஆனது உள்நாடு மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரூ.70 ஆயிரம் கோடி!

இது குறித்து சுசூகி நிறுவனம் உயர் அதிகாரி தோஷிரோ சுசூகி கூறுகையில், ''அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் இந்தியாவில் சுசூகி மோட்டார் நிறுவனம் 70 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

அப்பாவி
ஆக 26, 2025 16:12

வண்டிய வீட்டில் நிறுத்த இடம் இருக்கிறவனுக்கே கார் விக்கணும். எங்க ஊட்டு வாசலில் ரெண்டு கார் நிறுத்தி டார்ச்சர் குடுக்குறானுக.


வாய்மையே வெல்லும்
ஆக 26, 2025 19:21

உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றிகள் பல


vivek
ஆக 26, 2025 19:37

உன்னை ஒரு காமெடி பிீசு என்று தெரிந்து இருக்கும்...


தமிழ்வேள்
ஆக 26, 2025 15:41

தசம பாக திருட்டு கும்பல் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது ...ஸ்டெர்லைட் , இணையம் துறைமுகம் ,கூடங்குளம் என எந்த திட்டம் வந்தாலும் , பிரியாணி முழுங்கி விட்டு , கோட்டரில் மூழ்கியபின்பு , தர்ணா செய்யவேண்டியது ..கடல் வற்றும் , மீன் கர்ப்பம் தரிக்காது , மக்கள் இனப்பெருக்கம் இயலாது என கண்டமேனிக்கு உருட்டி , தொழில் இல்லாமல் செய்யவேண்டியது மட்டுமே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் ...இந்த கும்பலின் பிடியில் இருந்து தென்மாவட்டங்கள் மட்டுமல்ல , ஒட்டுமொத்த தமிழகமே மீட்கப்படவேண்டும் ..அயோக்கியர்களின் புகலிடம் தசமபாக பெட்டிகோட் கும்பல் .


G Mahalingam
ஆக 26, 2025 15:07

அதிமுக ஆட்சியில் திருச்சியில் புது வீட்டிற்கு நான் வருடம் 8500 ரூபாய் கட்டி இருக்கிறேன். வாடகை மாதம் 8000. இப்போது அது 24000 ரூபாயாக மாறி இருக்கும்.


Sivagiri
ஆக 26, 2025 14:21

சரி சரி , இதென்ன அதிசயம், இங்க பழைய பேட்டரிக்கு எல்லாம் செம டிமாண்ட்... கள்ள சாராயம் காய்ச்சதான்... டெக்னோலஜி ரொம்ப பழசு . . .


Raja k
ஆக 26, 2025 13:21

எல்லாம், குஜராத்துக்கும், உத்தரபிரதேசத்துக்குமே கொட்டுங்க...


chanakyan
ஆக 26, 2025 13:50

நம்ம ஊர்ல தான் எல்லாத்துக்கும் தான் எதிர்ப்பு கொடி காமிக்கிறோமே. அது தவிர கட்டிங் வேற. சமீபத்தில கூட ஒரு துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி கேரளாவுக்கு போச்சே. உண்மையான கம்யூனிஸ்டே வளர்ச்சிக்கான நோக்கத்தை புரிஞசிட்டு சைலண்டாகிட்டாங்க... அப்ப எல்லாம் கருத்து போட்டீங்களா


vivek
ஆக 26, 2025 14:00

இங்கே தமிழ்நாட்டுல எல்லாரும் டாஸ்மாக்கில் வியாபாரத்துல பிசியா இருக்காங்க ராசா


vadivelu
ஆக 26, 2025 14:12

நாம் வேண்டாம் என்று சொல்வதால் கேரளாவுக்கும் ஆந்திராவிற்கும் கூட நல்ல வாய்ப்புகள் போகிறதே.


N Sasikumar Yadhav
ஆக 26, 2025 14:18

திராவிட களவானிங்களால் தயாரிக்கப்படும் சாராயம் 500 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சொல்லுங்க விடியல் பயணம் அமோகமாக இருக்கும்


vivek
ஆக 26, 2025 14:44

நீங்க எல்லாம் டாஸ்மாக்கில் பிசியா இருக்கீங்க ராசா


ஆரூர் ரங்
ஆக 26, 2025 14:46

சாம்சங் ஸ்டிரைக்குக்குப் பிறகு ஒவ்வொருவராக ஓடுகின்றனர். இங்கே ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடவைத்த பிறகு அடானி குஜராத்தில் பெரிய தாமிர ஆலையைத் துவக்கியுள்ளார். நம்முடைய தவறுகளை நாம் எப்போது உணரப் போகிறோம்?


ராஜ்
ஆக 26, 2025 14:51

இங்க தான் கமிஷன் அதிகம் அப்பறோம் கொடி பிடிப்பிங்க அவர்கள் ஆயிரம் கோடிகளில் முதலீடு செய்பவர்கள் அப்பறோம் எதுக்கு வருவாங்க


Kumar Kumzi
ஆக 26, 2025 15:52

உனது ஓங்கோல் துண்டுசீட்டு அப்பாவுக்கு கட்டிங் கமிஷன் கட்டியே மாளாது


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 12:52

வாஷிங்டன்: கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலின் போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார். இன்றும் டிரம்ப் இப்படிSOLLI கொண்டு தான் இருக்கிறார் எது உண்மை


bharathi
ஆக 26, 2025 13:16

You believe to your wish ...I believe India and trust modi ji


Shivakumar
ஆக 26, 2025 13:16

சுட்டு வீழ்த்தப்பட்டது பாகிஸ்தானின் போர்விமானங்கள். இதைத்தான் ஜோக்கர் டிரம்ப் சொன்னார். இதைத்தான் நமது விமானப்படை அதிகாரி சமீபத்தில் கூறினார்.


vivek
ஆக 26, 2025 13:23

தலைப்புக்கும் உன் கருத்துக்கும் என்ன சம்பந்தம்...


மகிழ்காவியன் OJAX ANTORIO
ஆக 26, 2025 13:34

உங்கள் கேள்விக்கான பதில் மிக எளிது. நீங்கள் தேச பக்தராக இருந்தால் நம் ராணுவமும் அரசாங்கமும் சொல்வதை நம்புவீர்கள். ட்ரம்ப் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் வரும். அதே சமயம் நீங்கள் தேச விரோதியாக இருந்தால் ட்ரம்ப் சொல்வதை வைத்து நம் சொந்த நாட்டையும் ராணுவத்தையும் கீழிறக்க முயற்சிப்பீர்கள், பப்புவைப் போல. ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் போல் இந்த விஷயத்தில் தரம் தாழ்ந்து நடந்து கொள்ளவில்லை.


V K
ஆக 26, 2025 14:02

நம்ம முதல்வர் கூட சொன்னார் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து முதல் கை எழுத்து சாரி கை நாட்டே நிட் தேர்வு ரத்து பெரிய ரகசியம் தெரியும் என்று சொன்னார் இன்று சொல்கிறார் 98% வாக்குறுதி முடித்துவிட்டோம் எங்கே அவர்கள் சொன்ன முதல் வாக்குறுதி முடியவில்லை இதில் எது உண்மை


vadivelu
ஆக 26, 2025 14:13

பாகிஸ்தான் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறதே தெரியுமா


vadivelu
ஆக 26, 2025 14:14

பாய் எதை நம்ப வேண்டுமோ அதை நம்புங்கள்


vivek
ஆக 26, 2025 14:43

டிரம்ப் பாகிஸ்தானுக்கு வேலை பார்க்கிறார்..


ஆரூர் ரங்
ஆக 26, 2025 14:49

ஏழுமே அமெரிக்கத் தயாரிப்பு என்பதால் அவர் எந்த வகை விமானங்கள் என்பதை கூறவில்லை. ஊமைக்காயம்.


MUTHU
ஆக 26, 2025 18:25

பாகிஸ்தானின் ராணுவம் முடிந்தவரை எத்தனை ரபேலை காலிசெய்யமுடியுமோ அத்தனையை காலிசெய்துவிடவேண்டும் என்பதனை கட்டளையிட்டது அமெரிக்கா அல்லது சீனா. பாகிஸ்தானிடமிருந்து சுமார் ஒரே ஒரு மணி நேரத்தில் ஏராளமாய் ட்ரான் ஏவுகணை விமானம் என்று பல்வேறு திசைகளிலும் இருந்து ரபேல் நோக்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்தியா சுமார் ஒரு மணிநேரங்களுக்கு மிக சிறப்பான defense நெட்வொர்க்கிங் செயல்பாட்டினை நிரூபித்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் பிரான்ஸினை ஆயுத சப்ளையில் இருந்து ஒதுக்க பல்வேறு நாடுகள் முயல்வது வெளிப்படையாய் தெரிந்தது தான். rafaelin செயல்பாடுகள் வெளியுலகத்திற்கு தெரியுமுன் சண்டை நிறுத்தப்படவேண்டும் என்று அந்த நாடு -சீனாவாய் இருக்கலாம்- முனைப்புடன் இருந்துள்ளது. அதனாலே பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காண்பித்துள்ளது.


புதிய வீடியோ