உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு: லோக்சபாவில் பிரதமர் மோடி உரை

மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு: லோக்சபாவில் பிரதமர் மோடி உரை

புதுடில்லி: மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருடைய பங்கும் அடங்கி இருக்கிறது என லோக்சபாவில் பிரதமர் மோடி பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eg5p7d67&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹா கும்பமேளா நிகழ்ச்சி குறித்து லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்களித்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியில் அனைவரின் பங்கும் அடங்கி இருக்கிறது. அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்கும் உள்ளது.

மிகப்பெரிய இலக்குகள்

கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகீரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நாம் எல்லோருக்கும் நன்கு தெரியும். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மஹா கும்பமேளா விளங்கியது. நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பமேளா நடைபெற்றது. உத்தர பிரதேச மக்கள் மற்றும் பிரயாக்ராஜ் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அடுத்த தலைமுறை

கடந்தாண்டு அயோத்தியில் ராமரின் பிரம்மாண்ட பிரதிஷ்டை நடைபெற்றது. நமது திறன்கள் குறித்து மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு மஹா கும்பமேளா பதில் அளித்துள்ளது. மஹா கும்பமேளாவின் பிரம்மாண்ட அற்புதத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் சாட்சியாக விளங்குகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த கும்பமேளா ஒரு பெரும் உதாரணமாக திகழும். அது தேசத்திற்கு புதிய திசையும் வழங்கி உள்ளது.

தேசிய உணர்வு

உயர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை மஹா கும்பமேளா பிரதிபலித்தது. இந்தியாவின் புதிய தலைமுறை, பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவின் மகத்துவத்தை கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பார்த்தது. ஒரு தேசிய உணர்வை கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு பதிலடியை கொடுத்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகள் அமளி

மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் லோக்சபாவில் கூச்சல், குழப்பம் நிலவியது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழன்
மார் 18, 2025 18:29

மகா கும்பமேளா மகா வெற்றியாமா எப்படி அந்த வெற்றியை 30 பேரின் பிணத்தின் மேல் வைத்து கொண்டாட முடிகிறது??


செல்வேந்திரன்,அரியலூர்
மார் 18, 2025 21:01

அதெப்படி கொல்ட்டி பயலுக பூரா தமிழன்னு பெயரை வச்சிக்கிட்டு திரியிறீங்க?


P. SRINIVASAN
மார் 18, 2025 17:49

இவரு பிரதமரா இல்ல சாமியாரா? இவர் எப்போமோ மக்கள் ப்ரிச்சனை குறிப்ப தமிழ்நாடு மக்கள் பிரச்சனை பேசவேமாட்டாரு.. வெறும் zumla


ராஜாராம்,நத்தம்
மார் 18, 2025 21:04

தமிழக முதல்வரை பார்த்து இந்த கேள்வியை கேள்... நீயெல்லாம் கடைசி வரை திமுகவிற்கு போஸ்டர் ஒட்டத்தான் லாயக்கு...


Petchi Muthu
மார் 18, 2025 17:24

நான் கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.... ஒரு சிறு துளி அளவு கூட இடம் இல்லாமல் மக்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது