UPDATED : ஆக 19, 2024 03:48 PM | ADDED : ஆக 19, 2024 03:46 PM
புதுடில்லி: டில்லியில், பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் பிரதமர் மோடி. குழந்தைகள், மோடிக்கு ராக்கி கயிறு கட்டும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், 'எனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி' எனப் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்ஷா பந்தன் ஒன்று ஆகும். சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆக.,19) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷா பந்தன் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ab3wkk6p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
Galleryஇந்த நிலையில் டில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் இன்று பள்ளி குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். குழந்தைகள், பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மோடியும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தார். இதன் புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி, 'எனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி' எனப் பதிவிட்டுள்ளார்.