உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு, நமது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.கனடா பார்லிமென்டிற்கு நடந்த தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது. அக்கட்சி தலைவர் மார்க் கார்னி மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கனடா பார்லிமென்ட் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும், பிரதமர் ஆக பதவியேற்க உள்ளதற்கும் மார்க் கார்னிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகளாலும், சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதை உறுதி செய்வதற்கும், மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுக்கும் உறுதி பூண்டுள்ளது. நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கான நமது வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajah
ஏப் 29, 2025 18:04

இப்படியான வெற்றி கிடைக்க வேண்டும் என்பதால்தான் மம்தா, ஸ்டாலின் ஆகியோர் குடியேறிகளை ஆதரிக்கின்றார்கள். எதிர்காலங்களில் ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் சுயநலம் கருதி செயல் படுகின்றார்கள். இதை இப்போதே தடுக்காவிட்டால் 2050 ல் பெரும்பான்மை சிறுபான்மையாகிவிடும்.


சமீபத்திய செய்தி