உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பிரதமர் மோடி பிறந்த நாள்; உலக தலைவர்கள் வாழ்த்து

 பிரதமர் மோடி பிறந்த நாள்; உலக தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.பிரதமர் மோடி, இன்று 76வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.ரஷ்ய அதிபர் புடின்: இந்திய மக்களிடையே மரியாதையையும், சர்வதேச அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள்ள மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியா - ரஷ்யா இடையிலான கூட்டணியை வலுப்படுத்துவதில், அவரது தனிப்பட்ட பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி: என் நண்பர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு உடல்நலமும், ஆற்றலும், வெற்றியும் கிடைக்க வேண்டுகிறேன்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: என் நண்பர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாம் இணைந்து நம் கூட்டணியை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Subramanian
செப் 18, 2026 06:47

பிறந்தநாள் வாழ்த்துகள்


சந்துரு
செப் 18, 2026 04:55

இத்தாலி பிரதமரின் வாழ்த்தைக் கேட்டு டிரம்ப் கண்டிப்பாக வயிற்றெரிச்சல் அடைவார்.


Ramesh Sargam
செப் 17, 2026 20:57

அட நம்ம ராகுல் காந்தி கூட மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.


K.n. Dhasarathan
செப் 17, 2026 20:56

ஆனால் மோடி மட்டும் எத்தனை வயசானாலும் பதவியில் இருக்கலாமா ? அடுத்தவர்களுக்கு என்றால் ஒரு சட்டம், அப்படித்தானே முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்ற சீனியர்களை எப்படி வயது சொல்லி தடுத்து நிறுத்தநீர்கள், நீங்கள் உத்தமரா ?


kulanthai kannan
செப் 17, 2026 21:36

கவலை படாதீர். பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி. தோற்றவர் அவரே விலகி விடுவர். மற்ற குடும்ப கட்சிகளைப் போல் எண்ண வேண்டாம்.


முக்கிய வீடியோ