உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிசோரத்தில் ரூ.9 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி

மிசோரத்தில் ரூ.9 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அஸ்வால்: நீண்ட நாட்களாக சில அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலை செய்து வருகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.மிசோரமில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 51 கி.மீ நீளமுள்ள பைராயி- சாய்ராங் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 45 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்களை உள்ளடக்கிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=255l654c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மிசோரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தடைகளை தாண்டி பொறியாளர்கள், ஊழியர்கள் முயற்சியால் பைராயி- சாய்ராங் ரயில் பாதை சாத்தியம் ஆகி உள்ளது. ரயில்வே இணைப்பு மட்டுமல்ல, மாற்றத்திற்கான உயிர்நாடி. மிசோரம் மக்களின் வாழ்வாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக சில அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலை செய்து வருகின்றன. அதிக ஓட்டுக்கள் மற்றும் இடங்களை பெறக்கூடிய பகுதிகளில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது. அத்தகைய கட்சிகளால் மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எங்கள் அணுகுமுறை வித்தியாசமானது. புறக்கணிக்கப்பட்ட மக்கள் தற்போது முன்னணியில் உள்ளனர்.கடந்த 11 ஆண்டுகள் செய்த முயற்சியால் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினாக மாறியுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் தொழில்முனைவோருக்கான முக்கிய மையமாக மாறுகிறது. 4,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​மருந்துகள், காப்பீட்டுக் கொள்கைகள் அதிக வரி விதிக்கப்பட்டன. மருந்துகள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்தது. இன்று மலிவு விலையில் கிடைக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rathna
செப் 13, 2025 13:09

கடந்த 60 ஆண்டுகளில் ஆண்ட கட்சி, வடகிழக்கு மாநிலங்களை இரண்டாம் தாய் என்ற நிலையில் வளர்ச்சி இல்லாமல் வைத்து இருந்தனர். சரியான சாலைகள் கிடையாது. இதை பற்றி பதில் அளித்த அன்றய மத்திய அமைச்சர், சாலை போட்டால் சீனர்கள் சீக்கிரம் உள்ளே வந்து விடுவார்கள் என்று பதில் சொன்னார் மக்களை ஏழ்மையில் வைத்து அரசியல் செய்வதே இவர்களின் வோட்டு வங்கியாக இருந்தது. மிஷனரிகள் மூலம் புது வோட்டு வங்கி உண்டாக்கி ஆண்டு வந்தனர். இது தவிர ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிவப்பு நக்ஸல் தீவிரத்தை ஊக்குவித்து தனது பண பெட்டியை நிரப்பி கொண்டனர். அந்த கட்சியை சேர்ந்த ஒரு முதல் அமைச்சரே உயிருக்கு பாதிப்பான நிலையில் குண்டு தாக்குதலுக்கு உள்ளானார். தீவிரவாத மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் செலவை யாரும் ஆடிட் செய்வதில்லை. உதாரணமாக காஷ்மீர் அரசு கிட்டத்தட்ட வருடத்திற்கு 90000 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்தில் இருந்து பெற்றது. ஆனால் இதற்கு கணக்கு கட்டவேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால், தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்பதால். ஆனால் இப்பொது நிலைமை மாறி உள்ளது. உலகத்தில் மிகவும் உயரமான பாலங்கள் காஷ்மீரிலும், மிசோரம்லும் ரயில்வே துறையால் அமைக்கப்பட்டுள்ளது. மிசோரம் தலைநகர் ஐஸ்வால் டு டெல்லி, கலகத்தா, அசாம் போன்ற பகுதிகளுக்கு புது ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 4 வழி சாலை வசதி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பிரிவினை பேசும் மாநிலங்கள் இப்போது இந்தியாவோடு நல்ல முறையில் ஒற்றுமை பேண, மக்கள் வளர்ச்சி அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளது.


Rathna
செப் 13, 2025 12:49

கடந்த 70 ஆண்டுகளில் பர்மா - இந்தியா பார்டர் பங்களாதேஷி - இந்தியா பார்டரை திறந்து வைத்ததன் மூலம் பல வெளி நாட்டு கொடுங்கோலன்களை நாம் உள்ளே விட்டு விட்டோம். அவர்கள் மணிப்பூர், வங்காளம், ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டு அவிழ்த்து உள்ளனர். பர்மிய குக்கிகள் மணிப்புரில் தங்கி மணிப்பூரை இரண்டாக பிளவு படுத்த முயற்சி செய்கிறார்கள். பல இந்தியர்கள் பர்மாவிற்கு கடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இவர்களை 60 ஆண்டு காலம் ஆண்ட ஒரு எதிர்க்கட்சி அனுமதித்ததன் மூலம் நாட்டின் ஒற்றுமை மிகவும் கேள்வி குறியாகி உள்ளது. இப்போது பர்மா பார்டர் பாதுகாப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் வங்காளம் வழியாக பங்களாதேஷி கும்பல் உள்ளே வருவதை சில எதிர் கட்சிகள் வோட்டு வங்கிக்காக அனுமதிப்பது, மற்றும் வோட்டு லிஸ்ட்ல் தவறான நபர்களை விலக்குவதை இந்த கட்சிகள் எதிப்பதன் மூலம் இந்திய இறையாண்மையை கேள்வி குறியாக்கி ஆக்குகின்றன.


Narayanan Muthu
செப் 13, 2025 12:34

காசா பணமா அள்ளிவிடுங்கள் உங்கள் திட்டத்தை. என்ன ஆனது என்று எவனும் கேட்க போவதில்லை. கேட்டாலும் நீங்கள் பதில் சொல்ல போவது இல்லை. சொன்னாலும் உண்மை அதில் துளியும் இருக்க போவதில்லை. எல்லாமே ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றதுதான்.


V Venkatachalam
செப் 13, 2025 13:06

சாராய யாவாரி அள்ளி வுடறத போலவா? அள்ளி உடட்டுமே. இந்த மாதிரி விஷயங்களுக்கு இ.உ.பீஸ் க்கு எரிச்சல் ஏன் வருது? மூளை கிடையாது ங்குறதை இப்புடியா தம்பட்டம் அடிப்பானுங்க. கொஞ்சம் கூட உடம்பில் சொரணையே கிடையாது.


தியாகு
செப் 13, 2025 13:12

முதலில் உன் பக்கத்தில் இருந்துகொண்டு நான்கு வருடங்களில் ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் மக்கள் பணம் சுமார் முப்பதாயிரம் கோடிகளை ஆட்டையை போட்டு தனது குடும்பத்திற்கும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்பு குடும்பங்களுக்கும் சொத்து சேர்த்து கொடுத்த கட்டுமர திமுகவின் தலைமை குடும்பத்தை கேள்விக்கேட்கவும். பிறகு ஆற அமர்ந்து உட்கார்ந்து ஊழல் ஏதும் செய்யாத லஞ்சம் ஏதும் வாங்காத தூய்மையான தேசியவாதி மோடிஜியை கேள்விகேட்கலாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 13, 2025 13:28

8000 கோடி ரூபாய் திட்டத்தை நிறைவேற்றி விட்டு தான் 9000 கோடி ரூபாய் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. திமுகவை போல 4000 கோடி ஏப்பம் விட்டு விட்டு வெட்கமே இல்லாமல் வெள்ள நிவாரண நிதி கேட்க வில்லை.


Vasan
செப் 13, 2025 12:04

Honble Prime Minister Shri. Narendra Modiji, Advance birthday wishes for your upcoming birthday on Wednesday 17th September 2025, by when you would have completed 75 years of age, as well. The opposition parties, unable to match you on electoral field, are crying it foul and calling for your retirement at the stroke of completion of 75 years of age, because you had earlier said that politicians above 75 years should retire citing the age of Shri.L.K Advani ji. Please do not mind the voice of those asking your retirement, simply ignore them and continue your good work for the nation, especially the development of the so far neglected North East India. Long live Shri.Narendra Modi ji. Jai Hind.


Moorthy
செப் 13, 2025 11:53

மோடிஜி மீது எனக்கு மிக பெரிய பக்தி உண்டு...ஆனால் குல்லா, மயிலிறகு போன்ற இந்த ஒப்பனைகள் எரிச்சல்தான் வருகிறது..


V Venkatachalam
செப் 13, 2025 12:12

இது மிசோராம் மக்கள் அவருக்கு அவர்கள் வழக்கப்படி மரியாதை செய்கின்றனர். அதை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். இரண்டாவது அவர் இதை விரும்பி அணிகிறார் என்று எடுத்துக் கொள்ள கூடாது. நம்ம டமில் நாட்டில் அவருகங கொடுக்கும் மரியாதை மிகவும் சிற்பம் வாய்ந்தது. அதில் முக்கியமானது கருப்பு பலூன் மற்றும் கருப்பு குடை. அவரை வரவேற்க சொல்லப் பட்ட ஸ்லோகம் மிக மிக முக்கியமானது.


Narayanan Muthu
செப் 13, 2025 12:31

ஒரு நடிகனின் நாடகம் சிறக்காது


Vasan
செப் 13, 2025 15:59

The attire is to satisfy the regional tradition. Nothing wrong about it.


திகழ்ஓவியன்
செப் 13, 2025 11:52

இதுவரை தொடங்கிய திட்டங்கள் எவ்வளவோ, உதாரணம் AIIMS மதுரை அதை போல தான் இதுவும்


V Venkatachalam
செப் 13, 2025 12:23

தமிழ்நாட்டில் இருக்கும் ....அவமரியாதை செய்யணும்னு இதை பலூன் ஊதுற மாதிரி ஊதிக்கிணு இருக்காய்ங்க. ஊழல் பெருக்கெடுத்து ஆறாய் ஓடுது. அப்புடி ஓடுற ஊழல் வெள்ளத்தின் நடுவில் நின்று கொண்டு கோஷம் போடுவானுங்க. எய்ம்ஸ்ல் அடிக்க இருந்த பணத்துக்கு தான் இந்த கூப்பாடு.‌துண்டு முதல்வன் ஓசியில் அடித்த ஒரு செங்கல்லை காண்பித்து மெத்தை மேல் வைத்த மரவட்டைன்னு மண்டையில ஏறாது.


ஆரூர் ரங்
செப் 13, 2025 12:33

வாக்குறுதிப்படி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி எங்கே? செங்கல் ரெடியா?.


venugopal s
செப் 13, 2025 15:27

அதற்குத் தான் உங்கள் மத்திய பாஜக அரசு அனுமதி கொடுக்க மறுத்து விட்டதே, பிறகு எப்படி கடலூரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வரும்?


முக்கிய வீடியோ