உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவுக்கு அடுத்த அதிர்ச்சி: ஐநா பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்கும் பிரதமர் மோடி

அமெரிக்காவுக்கு அடுத்த அதிர்ச்சி: ஐநா பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்கும் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாக தெரிகிறது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கிறார். ஐநா சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் செப்.9ம் தேதி நியுயார்க்கில் தொடங்குகிறது. கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப்.23 முதல் செப் 29 வரை நடக்கிறது.முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார். அவர் செப்.23ம் தேதி பேச உள்ளார். இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இந் நிலையில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு டிரம்பை சந்திக்க நேரிடும். வரி விதிப்பு விவகாரத்தில் இன்னமும் தீர்வு காணப்படாத தருணத்தில் பிரதமர் மோடி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.தற்போதுள்ள நிலைபாட்டின் படி அவர் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை என்பதோடு பிரதமர் மோடி கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, பிரதமரின் பயணத்திட்ட அட்டவணையில் தற்போது வரை ஐநா சபை பொதுக்கூட்டம் இடம்பெறவில்லை.பிரதமர் நியுயார்க் பயணம் மேற்கொண்டால் டிரம்புடன் இருதரப்பு சந்திப்பு நடத்த வேண்டிய சூழல் உருவாகும். தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த சந்திப்பை தவிப்பது நல்லது என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது.எனவே,பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக ஐநா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துவார் என்று தெரிகிறது. விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள ஜெய்சங்கர், செப்.26ம் தேதி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ManiMurugan Murugan
செப் 06, 2025 23:55

அருமை


தங்கவேல்
செப் 06, 2025 17:52

அட எதுக்கு இந்த வீனா போன மீட்டிங்கில் கலந்து கொள்ள சிங்கத்தை அனுப்புகிறீங்க... ஒரு இணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களை அனுப்புங்க அது போதும்...


Sudha
செப் 06, 2025 15:36

ஐ நா கூட்டம் மட்டுமல்ல, ஐ நா வையே புறக்கணிக்க வேண்டும் . சந்திரபாபு மோதலில், இந்தியாவில் ஓர் ஐ நா சபை உருவாக வேண்டும்


Sudha
செப் 06, 2025 15:33

இவ்வளவு வெள்ள ந்தியா இருக்கீங்க, பாவமா இருக்கு


RAJ
செப் 06, 2025 14:20

உள்நாட்டில் துரோகிகள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் இருக்கும்வரை ... நாம் போராடித்தான் ஆகவேண்டும். ...


Tamilan
செப் 06, 2025 13:19

அதனால் இந்தியாவுக்குத்தான் நஷடம். உலக நாடுகளால் இந்திய ஓரம்கட்டுப்பட்டுவிட்டது என்றது அம்பலமாகிவிடும்


Anand
செப் 06, 2025 13:49

நீ மட்டுமல்ல ஏனைய பக்கி சொறி..... களும் என்ன நடக்கிறது என ஒரு மண்ணும் தெரியாமல் புரியாமல் இப்படி சொல்லி புளங்காகிதம் அடையுறானுவ..


Perumal Pillai
செப் 06, 2025 14:07

போலி Tamilan.


Sudha
செப் 06, 2025 16:38

இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்க, பாவமா இருக்கு


Venkatesh
செப் 06, 2025 19:54

நீ தமிழனல்ல... நாட்டின் சாபக்கேடு... மானங்கெட்ட மாடலுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் நாட்டையே மலிவாகப்பேசும் இழிபிறவி


Rajarajan
செப் 06, 2025 12:44

இந்தியா எதற்கும் சளைத்தது அல்ல. பாத்துருவோம் ஒரு கை .


Barakat Ali
செப் 06, 2025 12:43

துக்ளக்கார் மாதிரி மோடிக்கு விபரம் பத்தலை ..... பிரேசில் இல் இருந்து முதலீடு கொண்டுவர்றேன்னு உருட்ட ஒரு நல்ல வாய்ப்பு ..... நம்பறவங்க நம்பட்டுமே .... வட போச்சே .....


Shivakumar
செப் 06, 2025 12:57

ஆமாம் நீங்க சூரப்புலி பாரு.. உங்கள மாதிரி உருட்ட இன்னொருத்தன் பிறந்ததுதான் வரணும்.


Balamurugan
செப் 06, 2025 13:12

யாரு நீ


vbs manian
செப் 06, 2025 11:28

ஐநா காகிதப்புலி ஆகிவிட்டது. யாரும் மதிப்பதில்லை. உக்ரைன் காசா சூடான் ஆகிய நாடுகளில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டுவரமுடியவில்லை. போனாலும் ஒன்றுதான் போகாவிட்டாலும் ஒன்றுதான்


Anand
செப் 06, 2025 10:58

ஏற்கனவே குழம்பிப்போயிருக்கும் டிரம்ப் மேலும் எக்கச்சக்கமாக டென்ஷன் ஆகி தன்னை தானே பிறாண்டிக்கொள்ளப்போகிறார்.


முக்கிய வீடியோ