உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தேர்தல் கமிஷன்; பிரதமர் மோடி பாராட்டு

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தேர்தல் கமிஷன்; பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவதற்கான இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் முன்மாதிரியான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி கூறியதாவது: துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவது, ஓட்டளிக்கும் உரிமையைப் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதும் ஆகும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை தேசிய வாக்காளர் தினம் உணர்த்துகிறது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் முன்மாதிரியான முயற்சிகளை பாராட்டுகிறேன். ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை ஓட்டளிக்க செய்ய வேண்டும், ஓட்டளிக்கவில்லை என்றால் கேள்வி எழுப்ப வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேச வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் அட்டையை பெற்று ஓட்டளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், என்றார்.

99 கோடி வாக்காளர்கள்!

சென்னையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியதாவது: இந்தியாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 99 கோடியாக உள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 பொதுத்தேர்தலில் 65 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜன 25, 2025 21:53

கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் அடியாளை பாஸுக்கு பிடித்துப் போவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


Narayanan Muthu
ஜன 25, 2025 19:34

ஹரியானா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடந்த திருடப்பட்ட வெற்றியே இதற்கு சான்று. திருடனுக்கு துணை திருடனே


அப்பாவி
ஜன 25, 2025 18:22

இவிங்கதான் ஜனநாயகத்தை வீக் ஆக்குறாங்க.


Sundar R
ஜன 25, 2025 15:48

மத்திய தேர்தல் கமிஷன் ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரையும் தேர்தலில் போட்டியிட வரும்போது கடுமையான நேர்காணல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். அவர் வாரிசு, உறவினர், பினாமியாக இருக்கக்கூடாது. தேசவிரோதி, பிரிவினைவாதியாக இருக்கக்கூடாது. வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்துள்ள கட்சியோ மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான நோக்கங்களை வைத்திருக்கக் கூடாது. பொதுமக்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடித்து கார்ப்பரேட் கம்பெனிகள், சாராய தொழிற்சாலைகள், மால்கள், டிவி சேனல்கள், ஐபிஎல் உரிமையாளர், ரியல் எஸ்டேட், சினிமா தயாரிப்பு, சினிமா பட விநியோகஸ்தர் மற்றும் இதர தொழில்களை நடத்தக் கூடாது. நல்ல நேர்மையான வேட்பாளரைத் தேர்தல் கமிஷன் தேர்ந்தெடுக்கப் தவறினால் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் மற்றும் அனைத்து சமுதாய மக்களின் பணமும் கொள்ளை போகும். ஒரு ஐடி கம்பெனியில் இன்ஜினியரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுபோல் ஒவ்வொரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் கொள்ளையடிப்பதைத் தடுக்க அரசியல் சார்பற்ற பெரும் அதிகாரமுள்ள ஒரு தலைமையை ஏற்படுத்த வேண்டும். இப்படி செய்தால் தான் நம் நாட்டு மக்களின் அரும்பாடுபட்டு உழைத்து சேர்த்த பணம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப் படாமல் இருக்கும்.


Ramalingam Shanmugam
ஜன 25, 2025 15:08

ஈரோட்டில் பார்த்தோமே என்ன கிழித்ததென்று


GMM
ஜன 25, 2025 14:53

ஜனநாயம் வலு பெற தேர்தல் முக்கியம். குறைபாடுகள் நீக்கம் அவசியம். உலகம் முழுவதும் மொபைல் ஒரு எண் இருவருக்கு இருபது இல்லை. வாக்காளர் அட்டை ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தது. எப்படி.? பிறப்பு சான்று இல்லாமல் கள்ள குடியேறிகள் எப்படி ஓட்டுரிமை பெற்றனர்? வாக்காளர் தகுதியை பிரிட்டிஷ் இந்தியா நிர்ணயித்து இருந்தது. அதில் என்ன குறைபாடு. சாதி, மத அடிப்படையில் வாக்கு செலுத்தும் பழக்கம் வந்துவிட்டது. தடுக்க வழி? தேர்தல் பத்திர முறையை நீதிமன்றம் மாறு வழி கூறாமல் நீக்கியது சரியல்ல? இதனை தேர்தல் ஆணையம் தடுத்து இருக்க வேண்டும். ...


S.L.Narasimman
ஜன 25, 2025 14:52

ஆமாம். வோட்டுக்கு பணம், பிரியாணி, குவார்ட்டர் போதாதற்கு பட்டியிலே அடைக்கும் சடங்கு ஆகிய சனநாயகத்தைரொம்பவே வலுபடுத்த்துதூதூ......


திகழ்ஓவியன்
ஜன 25, 2025 14:23

பிஜேபி ஜனநாயக்கத்தியா


Kumar Kumzi
ஜன 25, 2025 15:39

ஓங்கோல் கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை ஜனநாயகம் பத்தி பேசுறான்யா ஹீஹீஹீ ..


சந்திரசேகரன்,துறையூர்
ஜன 25, 2025 15:44

அறிவாலய வாட்ச்மேன் திடல் ஓவியனுக்கு இன்று விடுமுறை போல..


முக்கிய வீடியோ