உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கே வலியுறுத்தல்

பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கே வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.'எக்ஸ்' வலைதளத்தில் கார்கே பதிவிட்டதாவது: நரேந்திர மோடி அரசு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களை குழிக்குள் தள்ளியது. வேலையின்மை விகிதம் 9.2 சதவீதமாக இருப்பதால், இளைஞர்களின் எதிர்காலம் பயனற்றதாக இருக்கிறது. 20 முதல் 24 வயதுடையவர்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான அரசு பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் 7 பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து மட்டும் 3.84 லட்சம் பேர் அரசு வேலைகளை இழந்துள்ளனர்.

சேமிப்பு

பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. மாவு, பருப்பு, அரிசி, பால், சீனி, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் மற்றும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. கிராமப்புறங்களில் வேலையின்மை கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு, மே மாதத்தில் 6.3 சதவீதமாக இருந்த வேலையின்மை தற்போது 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருளாதார பிரச்னை

100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மோடி அவர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்கள் தொடர்புகளை பயன்படுத்தி மக்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். ஆனால் ஜூன் 2024க்கு பிறகு அப்படியிருக்க முடியாது. நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தயா
ஜூலை 13, 2024 14:52

இவரு பொருளாதார கொட்ட வந்துட்டாரு!!


krishnan
ஜூலை 12, 2024 22:11

நேற்று கூட பொருளாதார நிபுணர்களும் பேசினார். ராகுல் , கார்கே தங்கள் சொத்தின் பாதியை தந்துவிட்டு பேசட்டும். சரியான கிருவை ஜோடி


Barakat Ali
ஜூலை 12, 2024 19:09

வலுவான பொருளாதாரத்துக்கு ஊழலே முதல் எதிரி ....... அதில் கரைகண்டது காங்கிரஸ் ....... ஆகவே பொருளாதாரத்தைப் பற்றி பாடமெடுக்க காங்கிரசுக்குத் தகுதி இல்லை .... இல்லை .... இல்லவே இல்லை ....


பேசும் தமிழன்
ஜூலை 12, 2024 18:51

முன்பு நீங்கள் ஆட்சியில் இருந்த போது.... ஊழல் மூலம் நாட்டை கொள்ளை அடித்து வைத்து இருக்கிறீர்கள்.... நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொன்றாக தான் சரி செய்ய முடியும்.


Narayanan Muthu
ஜூலை 12, 2024 18:40

பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமே இவர்கள்தான். இவர்கள் என்ன கவனம் செலுத்த போகிறார்கள். தெரியாத ஒன்றில் கவனம் செலுத்த இவர்களால் எப்படி முடியும். ஆனாலும் கார்கேவுக்கு குசும்பு அதிகம்.


Barakat Ali
ஜூலை 12, 2024 21:01

ரொட்டி போடுறவங்க விட்டுட்டு போன தவறுகளை சரி செய்கிறது பாஜக .....


Chandrasekaran Sriram
ஜூலை 12, 2024 18:19

இந்த ஆள் மீதே சொத்து குவிப்பு வழக்கு உண்டு என்று கேள்வி . ஆட்டைய போட்டதையெல்லாம் புடுங்கி அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும்


ram
ஜூலை 12, 2024 17:05

இவ்வளுவு பேசும் இவர், இவர் கட்சி ஆட்கள் பாராளுமன்றத்தில் தேவை இல்லாத விசயங்களை பேசி பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்க வேண்டாம் என்று சொல்லும் தைரியம் இருக்கா முதலில். அப்புறம் இவர் பிரதமருக்கு அட்வைஸ் செய்யலாம்.


Thiruvengadam Ponnurangam
ஜூலை 12, 2024 16:47

அதெல்லாம் அவர் தெளிவாகத்தான் பன்றார்.. நீங்க இப்ப தான் தூங்கி எழுந்தீங்க போல. பாராளு மன்றத்துல கிடைக்கும் பொன்னான நேரத்தை தேச நலனிற்கு ஏற்ற விஷயங்களை பேசி .. ஒற்றுமையுடன் மக்கள் நலனில் கவனம் செலுத்தியினால் நன்றாக இருக்கும் . மக்களிடம் நன்மதிப்பையும் பெற முடியும். முக்கியமாக நாம தமிழ்நாட்டு 40 மெம்பெர்ஸ் கிட்ட சொல்லுங்க


Rajarajan
ஜூலை 12, 2024 16:39

திரு. மோடியும் சரி, திரு. மன்மோஹனும் சரி, இருவருமே பொருளாதாரத்தில் தான் கவனம் செலுத்துபவர்கள் தான். நாட்டின் பெரும் வருமானத்தை கபளீகரம் செய்யும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அல்லது இழுத்து மூடும்போது, இடையில் நீங்கள் உள்ளே புகுந்து உளறாமல் இருந்தால் சரி.


Rpalnivelu
ஜூலை 12, 2024 16:29

யாரு பொருளாதாரத்த? மாபியா கும்பலின் பொருளாதாரத்தையா? அல்லது திருட்டு த்ரவிஷ கும்பலின் பொருளாதாரத்தையா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை