உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்: பிரதமர் மோடி உறுதி

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ''இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது,'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.குஜராத் மாநிலம், காந்தி நகரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் 4வது பொருளாதார நாடானது இந்தியா. இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியபோது, ​​நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

3 முறை தோல்வி

1947ம் ஆண்டிலேயே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சர்தார் படேலின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை அகற்ற தனது அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் போர்கள் நடந்தபோது, ​​பாகிஸ்தானை மூன்று முறை தோற்கடித்தோம். நேரடியாக போரிட்டு இந்தியாவை வீழ்த்த முடியாததால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் மக்களை தாக்குகிறது.

தேசப்பற்று

பாகிஸ்தானின் கொடிகள் பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டன. மேலும் அவர்களின் ராணுவத்தினர் இறுதி சடங்கில் பங்கேற்றனர். நாங்கள் யாருடனும் பகைமையைத் தேடவில்லை. நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். முப்படையினரை பாராட்டி நாடு முழுவதும் எழுச்சி உடன் நடை பெறும் மூவர்ணக் கொடி பேரணி, மக்களின் தேசப்பற்றை வெளிப்படுத்துகிறது. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடிபேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
மே 27, 2025 20:55

குடும்பக் கட்சிகளுக்கு ஒரு காட்டுக் காட்டுங்க .....


spr
மே 27, 2025 18:34

"நேரடியாக போரிட்டு இந்தியாவை வீழ்த்த முடியாததால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் மக்களை தாக்குகிறது." இது இனிமேல் அதிகமாகும் டிரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மக்கள் அச்சத்திலேயே வாச வேண்டியிருக்கும் பாகிஸ்தான் அடியோடு அழிக்கப்பட்டாலொழிய வேறு வழியில்லை ஆனால் முதலில் இதற்கு உதவுவோரை முதலில் இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் முடியவில்லையென்றால், விசாரணை ஏதுமின்றிச் சுட வேண்டும் பயங்கரவாதிகளுக்கு உயிர்ப்பயம் இல்லை ஆனால் உதவும் உளவாளிகளுக்கு உயிர்ப்பயம் உறுதியாக இருக்கும் பலர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதற்கு அது கூடக் காரணமாக இருக்கலாம். ஒரு சிறு கேள்வி இதுவரை பல பயங்கரவாதிகள் சுடப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே ஆனாலும் ஒருவருக்கு கூட அந்திமக் கிரியை நடந்ததாக செய்தி இல்லையே நம் செய்தித் தாள்கள் வெளியிடாமல் இருக்காதே அப்படியானால் சுடப்பட்டது உண்மையா நம் மக்கள் அவர்களுக்கு மனமொப்பி அவர்களுக்கு உதவியிருந்தால், அவர்கள் ஊர்வலம் நடத்தியிருப்பார்களே எனவே அவர்கள் பயந்தே உதவியிருப்பார்களோ இந்த அச்சத்தை எப்படிப் போக்குவது என்று மத்திய மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்


சுத்தகுமார்
மே 27, 2025 18:32

ஜப்பான் மாதிரி ஒரு தெருவையாவது சுத்தமா வெக்க முடியுமா? சாஸ்திரத்துக்கு எங்காவது ஒரு குப்பையை தூக்கிப் போட்டு மெடல் குத்திக்கிற நாடு இது.


சந்திரசேகரன்,துறையூர்
மே 27, 2025 19:17

ஏலே அசுத்த குமார் நாட்டை கேவலப்படுத்துவது உன் தாயை கேவலப் படுத்துவது போலாகும் இனியாவது திருந்த முயற்சி செய்.


மோடி தாசன்
மே 27, 2025 17:41

உலகம் போற்றும் உத்தம தலைவர் மோடிஜி முன்னாள் அனைவருமே தோல்வியை தழுவுவார்கள்


என்றும் இந்தியன்
மே 27, 2025 16:07

ஒருக்காலும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது


Velayutham rajeswaran
மே 27, 2025 15:30

அப்படி என்றால் தமிழ்நாட்டுக்கு வாங்க இங்கு உங்களுக்கு வேலை நிறையவே இருக்கிறது


N Sasikumar Yadhav
மே 27, 2025 13:48

முதல்ல உள்நாட்டு ஸ்லீப்பர் செல்களை அழிக்க வேண்டும் ஊடகம் என்கிற பெயரில் இருக்கும் நகர்ப்புற நக்சல்களை அழிக்க வேண்டும்


SUBRAMANIAN P
மே 27, 2025 13:47

அமெரிக்காவை ஒழிக்க முடியாது..


Arul. K
மே 27, 2025 13:39

நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்படும்வரை தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது மிகவும் கடினம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை