உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு!

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் இருவரும், இன்று போனில் கலந்துரையாடினர். இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினர்.அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு செய்வது சர்வதேச நாடுகள் மத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகின் முன்னணி நாடுகள் மத்தியில் அமெரிக்க எதிர்ப்பு மன நிலை ஏற்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவு வலுப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியும், சீனா, ரஷ்யா அதிபர்களும் கலந்துரையாடிய படம், உலகின் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியாகியது.இத்தகைய சூழ்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆகியோர் நேற்று மோடியுடன் போனில் பேசினர். ஐரோப்பாவின் முன்னணி நாடான பிரான்ஸ் அதிபர் இன்று மோடியுடன் போனில் பேசினார்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உடன் கலந்துரையாடினேன். பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவு முன்னேற்றம் குறித்து இருவரும் ஆய்வு செய்தோம். உக்ரைன் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்தியா - பிரான்ஸ் இடையிலான ராஜதந்திரக் கூட்டணி தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tamilan
செப் 06, 2025 20:47

அந்நிய அடிவருடிகள்


Priyan Vadanad
செப் 06, 2025 19:44

தோளில் கைபோட்டுக்கொண்டு இருவரும் போனில் பேசுவது பிரமாதம்.


திகழ்ஓவியன்
செப் 06, 2025 19:15

rafel கமிஷன் ஒழுங்கா வருவதில்லை என்றா


Prasath
செப் 06, 2025 19:59

அது உன் இத்தாலி அடிமை கட்சி ஆட்சி செய்திருந்தா கமிஷனுக்கு வழியே இல்லை.கொஞ்சம் அறிவாலய கேட்டுக்கு முட்டு கொடுத்து 200 வாங்கிட்டு போ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை