உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்; வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்

பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்; வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்

புதுடில்லி: மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று (செப்.,11) செல்கிறார். கடந்த 5ம் தேதி உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். மாலை 4.15 மணிக்கு தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். அதன்பிறகு, மாலை 5 மணியளவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரபிரதேசம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
செப் 10, 2025 16:51

ஆனால் தமிழ் நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் வரமாட்டோம்


venugopal s
செப் 10, 2025 17:22

வராமல் இருப்பது மட்டுமல்லாமல் நிவாரண நிதியையும் கொடுக்க மாட்டோம்!


ருத்ரன்
செப் 10, 2025 17:40

நீ indiannaa அல்லது indi சொம்பா ?


Artist
செப் 10, 2025 18:58

சென்னையில் கழிவு நீர் பாதைகள் நீர்நிலைகளில் வீடுகட்டிவிட்டு மோதி வந்து பாக்கணும்னு எதிர்பாக்கறது சரியல்ல …நாப்பது MP–க்கள் எதுக்கு? காண்டின்ல போண்டா சாப்பிட மட்டும் தானா ?


Kumar Kumzi
செப் 10, 2025 19:27

ஓட்டு போட்ட திருட்டு திராவிஷ திமுகவிடம் கேளுங்க...


ஈசன்
செப் 10, 2025 15:13

நேற்று முன்தினம் இமாசல் சென்றார். நாளை உத்தரகண்ட். இறைவன் தான் நம் பிரதமருக்கு தேவையான சக்தியை அளிக்க வேண்டும்


சமீபத்திய செய்தி