உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எங்கள் வீட்டிற்கு வந்த புது உறுப்பினர் தீபஜோதி "- பிரதமர் மோடி நெகிழ்ச்சி

"எங்கள் வீட்டிற்கு வந்த புது உறுப்பினர் தீபஜோதி "- பிரதமர் மோடி நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி வீட்டில் வளர்க்கப்பட்ட பசு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. புதிய வரவான இந்த கன்றுக்கு 'தீபஜோதி' எனப் பெயர் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.கன்றுவை கொஞ்சும் பிரதமர், எக்ஸ் வலைதளத்தில் வீடியோ மற்றும் படங்களை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7fiz3c94&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்திற்கு புதிதாக உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார். தாய் பசு புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதன் நெற்றியில் ஒளியின் அடையாளம் உள்ளது. இதனால் கன்றுக்கு 'தீபஜோதி' என்று பெயர் வைத்துள்ளேன். லோக் கல்யாண் மார்க்கில் புதிய உறுப்பினர் தீபஜோதி ! என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். வீடியோவில், கன்றுக்குட்டிக்கு மோடி மாலை அணிவித்து, சால்வை போர்த்தி வரவேற்கிறார். அவர் கன்றுக்குட்டிக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rpalnivelu
செப் 15, 2024 07:07

திருட்டு த்ரவிஷ குடும்ப உறுப்பினர் இருவர் சுருட்டிய முப்பதாயிரம் கோடி போலவா?


venugopal s
செப் 14, 2024 23:54

பத்திரம், இப்படித்தான் இங்கு வந்த ஒரு ஆடு கொஞ்ச நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டது !


குமார்
செப் 14, 2024 22:07

மிக அழகான காட்சி அந்த கன்று என்ன புண்ணியம் செய்ததோ பல லட்சம் பேர் கண்கள் அதை பார்க்க செய்துள்ளது


அப்பாவி
செப் 14, 2024 19:33

காளைக் கன்னுக்குட்டியா இருந்தா துரத்தி விட்டிருப்பாங்க.


N.Purushothaman
செப் 14, 2024 18:48

தீப ஜோதி ...நல்ல பெயர் ...திருட்டு திராவிடனுங்க வழக்கம் போல கதறுவாங்க ....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2024 22:08

மர்ம நபர்கள் சிலர் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள் .... புரிந்து கொள்வீர்கள் ....


T.sthivinayagam
செப் 14, 2024 18:10

அட மறுபடியும் எலஷ்சன் வருதா


Narayanan Muthu
செப் 14, 2024 19:46

நவம்பரில் மராட்டியம் முக்கியம்.


Hari
செப் 14, 2024 19:54

If election comes you will get tasmac and amount. Enjoy shivanayagam


என்றும் இந்தியன்
செப் 14, 2024 17:47

நல்லவேளை இது இந்தியா அதுவும் சைவ பிரதமர் இல்லைன்னா "புலம்பெயர்ந்தோர் ஓஹியோவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள் என்ற டொனால்ட் டிரம்பின் வாதம் நிஜமாகினால் என்ன ஆகும்????


venkat
செப் 14, 2024 16:16

ராஜா வீட்டு கன்னுகுட்டி. மிக அழகாக உள்ளது.


Natchimuthu Chithiraisamy
செப் 14, 2024 16:10

இது ஒரு சுகமான அனுபவம் வாழ்வில் மகிழ்ச்சியை கொடுக்கும். நான் காங்கேயத்தில் வசிக்கிறேன். நான் காங்கேயம் மாடு ஓன்று வளர்க்கிறேன். லாபம் தராது. அலுவலக வேலைகளுக்கு இடையில் மகிழ்ச்சியை கொடுக்கும்.


Kumar Kumzi
செப் 14, 2024 15:54

கவனமா பாத்துக்குங்க சார்


சமீபத்திய செய்தி