உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி செய்த மிகப்பெரிய செயல்; அமித் ஷா பெருமிதம்

மகளிர் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி செய்த மிகப்பெரிய செயல்; அமித் ஷா பெருமிதம்

கொல்லம்: கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி, நாட்டின் கிராமப்புற மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக, மிகப்பெரிய நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பிலான பல்வேறு திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது; நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அனைத்து விவசாயிகளும், கூட்டுறவுத் துறை சார்ந்தவர்களும் மத்திய அரசுக்கென தனி கூட்டுறவு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது நீண்ட ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம் நாட்டின் கிராமப்புற மேம்பாடு, விவசாய வளர்ச்சி மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக ஒரு மிகப்பெரிய படியை எடுத்து வைத்துள்ளார்.திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் போன்ற பகுதிகளில் சுதந்திரத்திற்கு முன்பே கூட்டுறவு சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளன. தற்போது கேரளாவில் 23,000த்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. 2026-27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த (SHE Mart) 'ஷி மார்ட்' திட்டம் கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறப் பெண்கள் கடன் பெறுவோராக இல்லாமல் தொழில் முனைவோராக மாறுவார்கள். பெண்களின் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊரகத் தொழில் நிறுவனங்களை நேரடியாக சந்தையுடனும் நுகர்வோருடனும் இணைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
செப் 26, 2026 20:15

கூட்டுறவு சங்கம் வாழ்வளித்த குடும்பங்கள் ஏராளம். கூட்டுறவு அமைச்சகம் ஒரு முற்போக்கு நடவடிக்கை. விவசாய, நெசவாளர், பால் கூட்டுறவு சங்கம் சில நூறாண்டு கடந்து இருக்கும். அரசு தன் தேவைக்கு தனியாருக்கு முன் கூட்டுறவு சங்க தயாரிப்புகளை வாங்க வேண்டும். தேசிய சொத்தான கல், மணல் குவாரிகள் கூட்டுறவு சங்கம் வசம் ஒப்படைக்க வேண்டும். திமுக விவசாய, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழித்து விட்டது?


அசோகன்
செப் 26, 2026 19:29

மகளிர்க்காக மட்டுமா இந்தியாவை வல்லரசாக்கியவர் நம் தேச பிதா மோடிஜி


சமீபத்திய செய்தி