உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் வேலை திட்டத்தில் பிரதமர் மோடியின் நோக்கம்: ராகுல் கண்டுபிடிப்பு

100 நாள் வேலை திட்டத்தில் பிரதமர் மோடியின் நோக்கம்: ராகுல் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்(MGREGA) மத்திய அரசு பல மாற்றங்களை செய்து பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட விபி ஜிராம்ஜி மசோதா நிறைவேறி சட்டமாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிக்கும் பிரதமர் மோடியின் நோக்கத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன?* தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை நிர்ணயிக்கும் உரிமையை பறிப்பது* பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பறித்து அவர்களின் கைகளை கட்டிப் போடுவது* மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து , டில்லியில் குவிப்பது.* அனைத்து அதிகாரங்களும், செல்வமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திருந்த மன்னர்கள் மற்றும் மகாராஜாக்களின் காலத்திற்கு நாட்டை பின்னோக்கித் தள்ளுவதுகுறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலைக்கான உத்தரவாதம், சுதந்திரத்துடனும் கண்ணியத்துடனும் வேலை செய்வதற்கான உரிமை இவற்றைத் தான் நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே குரலில் '' மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எங்களின் வாழ்க்கையை மாற்றியது,'' என உரக்கக்கூறினர். இந்த மாற்றத்தைக் கொண்டு வர பல தசாப்தங்கள் ஆனது.இன்று அதே தொழிலாளர்கள், தங்களை மோடி அரசு அடிமைப்படுத்துகிறது என்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 28, 2026 10:08

மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மக்களின் வாழ்க்கை மாற்ற பல தசாப்தங்கள் ஆனதாக இவரே கூறுகிறார். ஒரு தசாப்தம் என்பது பத்து ஆண்டுகள். பல தசாப்தங்கள் என்றால் பல பத்து வருடங்கள். இவ்வளவு மெதுவாக மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு திட்டம் தேவையா? திட்டம் என்று ஒன்று வந்தால் அது எவ்வளவு குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அப்போது தானே வளர்ச்சி என்பது இருக்கும். பல பத்து வருடங்கள் கழித்து என்ன வளர்ச்சி காண்பது. இது ராகுல் தாத்தா நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டம் தான் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. நேரு மகான் பல ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டு வந்தார். ஆனால் இன்று வரை ஒரு ஐந்தாண்டு திட்டம் கூட முழுமையாக முடிக்கவில்லை.


HoneyBee
ஜன 27, 2026 21:49

எப்ப தான் இவரோட வாய் பொய் சொல்லாம இருக்குமோ. உள் நாட்டில் இருந்தாலும் வெளிநாடு போனாலும் நம் நாட்டை கேவலமாக பேசியே சாகிறார். இவருக்கு பதவி வெறி. எப்படியாவது ஆட்சிக்கு வந்து நாட்டை சப்பை மூக்கனிடம் விறறு விட வேண்டும்


நிக்கோல்தாம்சன்
ஜன 27, 2026 21:07

வாரிசு அரசியல் ஒழியவேண்டும்


Ramesh Sargam
ஜன 27, 2026 20:58

நீ போகும் நாடுகளிலெல்லாம் இந்திய நாட்டைப்பற்றி இல்லாததும், பொல்லாததும் கூறி இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறாய். முதலில் அதை நிறுத்தவும். இல்லை இந்தியாவை விட்டு வெளியேறவும். QUIT INDIA.


SRIRAM
ஜன 27, 2026 20:54

இங்க தமிழ் நாட்டுல உங்க தன்மானம் கேள்விக்குறி யா இருக்கு தீய முகவின் நோக்கம் என்ன என்று கண்டுபுடிக்குங்க ராவூல் அவர்களே....


பேசும் தமிழன்
ஜன 27, 2026 19:44

இவருக்கு... தான் ஏதோ பட்டத்து இளவரசர் என்று நினைப்பு... யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைத்து கொண்டு.... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்.... உங்கள் புத்தி தெரிந்து தான்... தேர்தல்களில் மக்கள் உங்களை விரட்டி அடிக்கிறார்கள்.... எப்போதும் இருக்கும் நாட்டை பற்றி குறை கூறுவது.... குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு.... பிறகு எப்படி மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும் ???


ganesan
ஜன 27, 2026 19:35

இங்கேயும் ஒருத்தர் இப்டியே பேசி பி ஜே பி வந்துரும் வந்துரும் னு சொல்லி வரவே வச்சிட்டார்பா


Varadarajan Nagarajan
ஜன 27, 2026 19:22

தற்பொழுதுள்ள நடைமுறைப்படி வேலைக்கு வராதவர்களுக்கும் பதிவு செய்வது, பதிவுசெய்தபின்பு வீட்டுவேலைக்கு அனுப்புவது, வேலையை செய்யாமல் மரத்தடியில் படுத்து உறங்குவது, விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெறும் காலத்தில் 100 நாள் வேலையையும் செய்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுத்துவது போன்றவர்கள்தான் நடக்கின்றது. இவைகளை மாற்றியமைத்தால் பலருக்கு பிடிக்கவில்லை. ஊழல் செய்யமுடியாது மற்றும் மாநிலங்களின் பங்களிப்பும் சேர்ந்து ஊதியம் வழங்க வேண்டுமென்பதால் எதிர்க்கின்றார்கள்.


தமிழ்வேள்
ஜன 27, 2026 19:05

பயோ மெட்ரிக் வருகை பதிவு காரணமாக போகஸ் போலி வேலையாட்கள் சேர்த்து மேலதிக ஆட்கள் கணக்கு காட்டி திருட முடியாது.... வருகை பதிவு தவிர வெளியே செல்லும் போதும் பதிவு உண்டு என்பதால் குடித்து விட்டு மரத்தடியில் உருண்டு புரண்டு வேலை பார்ததாக ரெக்கார்ட் கிரியேட் செய்ய முடியாது.. பயனாளர் கூலி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் கட்டிங் வாங்கி கொழுக்க முடியாது.இந்த காரணங்களால் ரெண்டு பேரும் பேயை பார்த்தது போல அலறுகிறார்கள்..


பேசும் தமிழன்
ஜன 27, 2026 18:51

பப்பு வேகாது... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்காதே.... 100 நாட்கள் வேலை திட்டத்தில் இருந்த குறைகளை நீக்கி..... வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு.... அதில் உங்களுக்கு என்ன சங்கடம் வந்து விட்டது.... மத்திய அரசை பாரட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை.... குறை சொல்வதை முதலில் நிறுத்து.... முந்தைய திட்டத்தின் போது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை இருந்தது,... இப்போது விவசாய வேலை இல்லாத நாட்களில்... அந்த வேலையை வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.... அதனை வரவேற்க வேண்டும்.... விவசாய வேளையும் முக்கியம்.


முக்கிய வீடியோ