உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஒவ்வொரு முறையும் ஏழை மக்கள் இறக்கும்போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்திய பொது மக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூரில் குடிநீருக்கு மாறாக விஷமே விநியோகிக்கப்பட்டது. அதே சமயம் நிர்வாகம் கும்பகர்ணனைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது.வீடுதோறும் துயரம் பரவியுள்ளது. ஏழைகள் நிர்கதியாக நிற்கின்றனர். இதற்கு எல்லாம் மேலாக பாஜ தலைவர்களிடம் இருந்து ஆணவமாக அறிக்கைகள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டன. அரசோ அதற்கு பதில் அகந்தையை வழங்கி உள்ளது.அசுத்தமான துர்நற்றம் வீசும் தண்ணீரைப் பற்றி மீண்டும் மீண்டும் மக்கள் புகார் அளித்தனர். இருந்தும் ஏன் செவிசாய்க்கப்படவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்தது எப்படி?சரியான நேரத்தில் நீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்இவை சும்மா கேட்கப்படும் கேள்விகள் இல்லை. இவை அனைத்தும் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பதற்கான கோரிக்கை. சுத்தமான நீர் என்பது சலுகை அல்ல. அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமை கொலை செய்யப்பட்டதற்கு பாஜவின் இரட்டை இன்ஜின் அரசும், அதன் அலட்சியமான நிர்வகம் மற்றும் அதன் இரக்கமற்ற தலைமை ஆகியவையே பொறுப்பு.மபி மாநிலம் இப்போது மோசமான ஆட்சியின் மையமாக மாறியுள்ளது. ஓரிடத்தில் இருமல் மருந்து குடித்து ஏற்படும் மரணங்கள்.மற்றொரு இடத்தில் அரசு மருத்துவமனைகளில் எலிகளால் குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்படுவது. இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து ஏற்படும மரணங்கள். ஒவ்வொறு முறையும் ஏழை மக்கள் இறக்கும் போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

S.V.Srinivasan
ஜன 03, 2026 09:52

மோடி மெளனமாக இருக்கிறார் சரி. நீ என்ன பண்ணின? நினைச்சா வெளிநாட்டுக்கு ஓடிப்போயிடுற, இங்க உன் கட்சிக்குள்ள குடுமிபுடி சண்டை நடக்குது, அதெல்லாம் எதாவது தெரியுமா உனக்கு?


பேசும் தமிழன்
ஜன 03, 2026 07:43

வேங்கை வயல் கிராமத்தில் குடிக்கும் நேரில் ம..... தை கலந்த சம்பவத்தை பற்றி இந்த இத்தாலி பப்பு என்றாவது பேசியது உண்டா ??


Vishnu kumar
ஜன 03, 2026 03:56

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இதே போன்று கழிவு குடிநீர் பருகி பலர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்போது இந்த பாகிஸ்தான், சீன ஆதரவு ராகுல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை


தாமரை மலர்கிறது
ஜன 03, 2026 02:13

ராகுல் மக்களின் சாவில் அரசியல் செய்கிறார். ஒரு கடைமட்ட அரசு ஊழியர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த அரசு எப்படி பொறுப்பாகும்? தமிழகத்தில் நாலு இளைஞர்கள் போதை பொருள் சாப்பிட்டு ஒரு வடஇந்தியரை வெட்டியதற்கு ஸ்டாலினை குறை சொல்ல வேண்டியது தானே.


muthuvelpalanisamy
ஜன 02, 2026 22:38

ஏண் எப்படி நீங்க இந்திரா காந்தி கொல்லப்பட்ட பொழுது சீக்கியர்களை தேடி தேடி கொன்றீர்களே


Santhakumar Srinivasalu
ஜன 02, 2026 21:03

ஷாருக்கான் வங்க தேச வீரரை ஏலத்தில் எடுத்ததற்கு ராகுல் பதில் என்ன?


Ramesh Sargam
ஜன 02, 2026 20:48

போபால் விஷவாயு தாக்குதல் நடந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? அதற்கு காரணமானவரை பத்திரமாக அவர் நாட்டுக்கு அனுப்பிவைத்தீர்கள். அதை எப்படி நீ மறந்தாய், ஞானத்தங்கமே...?


Bhakt
ஜன 02, 2026 20:27

அயல் நாட்டு கைகூலிக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல மாட்டார்.


SUBBU,MADURAI
ஜன 02, 2026 20:22

ஜெர்மனி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட தனது இரண்டு முக்கிய வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமையை கண்டிப்பதற்காக ராகுல்காந்தி இந்தியா வந்திருப்பது உண்மையில் நாம் செய்த பாக்கியம்!


SUBBU,MADURAI
ஜன 02, 2026 19:53

When Muzaffarnagar riots happened Rahul and Sonia Gandhi only visited Muslims and CM Akhilesh Yadav d aid only for Muslims. Hindu forgets everything so fast!


புதிய வீடியோ