உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடில்லி: தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, இரண்டு நாள் தேசிய நீர் துறை உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நீர் மேலாண்மை மற்றும் திட்டமிடலுக்கு ஏஐ தொழில்நுட்பம் மறறும் தரவுகளை பயன்படுத்த வேண்டும். நீர் துறை சார்ந்த தகவல்களை ஒரே இடத்தில் சேகரித்து, சீரான முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; நீர் பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'ஜல் உத்சவ்' திருவிழாவை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். முறையான திட்டமிடல், போதிய வளங்கள் மற்றும் திறமையான அதிகாரிகளிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாற்ற முடியும். விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன் படுத்துவதற்கான முன்கூட்டிய திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்களின் சிறந்த நீர் மேலாண்மைப் பயிற்சிகளை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் எதிர்கால நீர் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தயார்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
செப் 03, 2026 15:56

ஏ. ஐ ய வெச்சு மழை பெய்விக்க முடியாது.. இருக்கிற மரங்களை வெட்டி புல்லட் ரயில் உடலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2026 14:26

கிரிக்கெட் ஸ்டேடியத்துல எவ்ளோ வேஸ்ட் ஆகுது >>


Svs Yaadum oore
செப் 03, 2026 09:19

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை எடுப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறியுள்ளது. தமிழக அரசு, இதை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை விரைவில் இயற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ....வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்கு படுத்தவும், வரைமுறைப்படுத்தவும் சட்டமோ விதிகளோ தமிழ் நாட்டில் இப்போது ஏதுமில்லை.சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் அளவுக்கு அதிகமான அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு நீர் மட்டம் குறைந்து உப்பு நீர் கலந்து தமிழகம் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ...வாழ்க தமிழ் ...


Indian
செப் 03, 2026 09:08

தண்ணீரே இல்லாத பாலைவன வளைகுடா நாடுகளில் தண்ணீர் பிரச்சினையே இல்லை. இவ்வளவு ஆறு , நதி , மழை இருந்தும் தண்ணீர் பிரச்னை இந்தியாவில் இருக்கிறது என்றால் , அது தான் சாப கேடு என்பது . This is attitude based problem.


இறைவி
செப் 03, 2026 08:42

நன்று. நன்று. நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் பெரும் நிபுணர்களாக இருந்தார்கள். அதுவும் தமிழன் உலகுக்கே வழிகாட்டியாக இருந்தான். உண்மை. ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாம் ஏன் அந்த நீர் மேலாண்மையை பின் பற்றாமல் அழித்தோம். இந்த அழிப்பு கடந்த அறுபது வருடங்களில்தான் உச்சம் தொட்டது. யார் தமிழனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியது. கடந்த அறுபது வருடங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து எவ்வளவு அரசு கட்டிடங்களும், அரசு அனுமதியுடன் தனியார் வீடுகளும், கல்லூரிகளும், தொழிற்சாலைகளும் கட்டப்பட்டது என்று தெரியுமா? ஆறுகளில் பத்து முதல் பதினைந்து இருபது அடிவரை மணல் இருந்த போது நிலத்தடி நீர் வெகுவாக குறையவில்லை. இன்று ஆறுகளில் களிமண் தரைதான் தெரிகிறது. நகர்களின் சாக்கடை கழிவு நீர் ஆறுகளில் நேரடியாக விடப்பட்டது. இன்று எந்த ஒரு தமிழக நதியிலும் நேரடியாக உங்களால் தண்ணீர் குடிக்க முடியாது. நதிகளை யார் கெடுத்தது. நீர் பூமியின் உள்ளே உறிஞ்சப்பட மணல் படுகை இல்லை. அத்தனை மணலும் தமிழ் நாட்டின் கட்டிடங்களுக்கு மட்டும்தான் பயன் பட்டதா? வேறு அண்டை மாநிலங்களுக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ ஏற்றுமதியே ஆகவில்லை என்று உம்மால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்ல முடியுமா? அறுபது வருடங்களாக திராவிட தமிழர்கள்தானே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்போது தமிழர்களின் மேலாண்மை அறிவு தூங்கி விட்டதா. எனக்கு மாதம் 1000 ரூபாயும் ஓட்டுக்கு 2000 ரூபாய் கிடைத்தால் போதும் என்ற நினைவோடு ஒட்டு போடும் பகுத்தறிவை அடமானம் வைத்த தமிழர்கள் இருக்கும் வரை தமிழகம் பழைய பெயரில் ஓடும் ஒரு பெருங்காய டப்பாதான். நாம் பெற்ற பணம் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய சிறப்பான சாலைகள், தண்ணீர் வசதி, தனியாருக்கு சவால் விடக்கூடிய தரமான கல்வி கூடங்கள், மருத்துவ வசதிகள் போன்றவை அபகரிக்கப்பட்டதால் கிடைத்தது என்று தமிழன் உணர்ந்தால் அன்றுதான் தமிழகத்திற்கு விடியல். ரமணா படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தமிழர்களை செண்டிமெண்டல் இடியட் என்பார். அதில் எந்த தவறும்வில்லை. நாம் எப்போதுமே உணர்சிக் குவியலாகத்தான் இருப்போம். அதனால்தான் அரசியல் வியாதிகள் பத்து பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாத ஏதாவது ஒரு பிரச்சனையை தொடர்ந்து வெளியிட்டு, பிரித்தாளும் கொள்கைப்படி நம்மை உணர்சி குவியலாகத்தான் வைத்திருப்பார்கள். நாமும் அவர்களை கண்மூடி பின் தொடர்வோம். வாழ்க தமிழன்!!!


Dv Nanru
செப் 03, 2026 07:49

ஒன்றும் தேவையில்லை. நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்தினாலே போதும். இப்பொழுது புதிய தொழில்நுட்பம் AI என்பது தேவையில்லாத ஒன்று. நீரைச் சேகரிக்க நமக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகளின் சிறப்பையும், செயற்கை நுண்ணறிவின் AI தேவையின்மையையும் பழங்காலம் முதலே தமிழர்களும் இந்திய முன்னோர்களும் நீர் மேலாண்மையில் ஒப்பற்ற வல்லுநர்களாகத் திகழ்ந்தனர். 1. ஏரிகள், குளங்கள், கலிங்கல்கள் மற்றும் அணைகளைக் கட்டி மழைக் காலங்களில் நீரைச் சேமிக்கும் நுட்பத்தை அவர்கள் இயல்பாகவே அறிந்திருந்தனர். 2. இயற்கையோடு இயைந்த நம் முன்னோர்களின் கட்டமைப்பு முறைகளே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தப் போதுமானதாக இருந்தன. 3. மழைநீரையும் இயற்கை வளங்களையும் எவ்வாறு காக்க வேண்டும் என்பதற்கு நமக்கு வெளி மனிதர்களோ அல்லது புதிய முறைகளோ கற்றுத்தர வேண்டியதில்லை. 4. இன்றைய நவீன யுகத்தில் ஏஐ AI போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் நீர் மேலாண்மைக்கு அத்தியாவசியமானவை அல்ல. 5. பல நூறு ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளே தற்போதைய தேவைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாகும். 6. புதிய தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பியிருக்காமல், நமது பாரம்பரிய நீர்நிலைகளைச் சீரமைப்பதே முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். 7. தூர்க்கப்பட்ட குளங்கள், ஏரிகளைத் தூர்வாரிப் பராமரிப்பதே நீர்ப்பற்றாக்குறையைப் போக்குவதற்கான உண்மையான வழி. 8. நம் முன்னோர்களின் அறிவுரைகளையும், அவர்கள் உருவாக்கிய நீர் சேமிப்பு முறைகளையும் மீட்டெடுப்பதே நிலையான எதிர்காலத்தைத் தரும். 9. எனவே, தேவையற்ற நவீனத் தொழில்நுட்பங்களை விட பழமையான மரபுசார் நீர் மேலாண்மையைப் பின்பற்றுவதே மண்ணுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும். AI என்பது தானாக எதையும் உருவாக்கும் மாயாஜாலம் அல்ல மனிதர்கள் ஏற்கனவே உருவாக்கிய அறிவு, தரவுகள் மற்றும் அனுபவங்களைச் சேகரித்து, அதைத் தொகுத்துக் கொடுக்கும் ஒரு கருவி மட்டுமே. நாம் கொடுக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அது நமக்கே பதில் சொல்வதால், இதை "புதிய அறிவு" என்று சொல்வதை விட "தரவுகளின் மறுசுழற்சி" சொல்வதே பொருத்தமானது. உண்மை நிலை: தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், அது நம் முன்னோர்களின் மரபுசார் அறிவுக்கு மாற்று ஆக முடியாது. நம் முன்னோர்கள் இயற்கையை நேரில் பார்த்து, உணர்ந்து நீர் மேலாண்மை செய்தனர் AI என்பது தரவுகளை மட்டும் வைத்து இயங்கும் ஒரு இயந்திரம். எனவே, AI என்பது வெறும் தகவல்களைத் தரும் ஒரு துணைக் கருவியே தவிர, அதுவே இறுதித் தீர்வாகவோ அல்லது மனித அறிவுக்கு மேலான ஒன்றாகவோ ஆகிவிட முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Natarajan
செப் 03, 2026 07:31

Drip irrigation is the best method for the farmers. Did you know that several Punjabis migrated to the south and bought a lot of cheap lands in the Paramakudi area but chose Virudhunagar to stay for the purpose of education for their kids. They used drip irrigation and made a lot of money. I bet that Manikam Takur is a decedent of those Punjabis because they adopted the local names, including Pandians. Besides, they need to save the rain water, and I remember a movie by Atharva and Balaji, Boomerang. I know a lot about Tamil Nadu, even though I left more than 50 years, now. I understand that there is still a 3-acre land in my mothers name there in the village near Virudhunagar.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை