உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல; உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளிடம் கலந்துரையாடிய பிரதமர்

கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல; உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளிடம் கலந்துரையாடிய பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது,' என்று உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் நேற்று இரவு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, இந்திய வீராங்கனைகளிடம், உலகக்கோப்பையை வென்ற ரகசியம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறுகையில்,'கடைசியாக 2017ல் உங்களை சந்தித்தோம் அப்போது கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை நாங்கள் உலக சாம்பியன்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களை சந்தித்தது பெருமையளிக்கிறது. எதிர்காலத்திலும் இதே மாதிரியான சூழலில் உங்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இலக்காக நிர்ணயிக்கிறோம்,' என்றார். வீராங்கனைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது; நீங்கள் ஒரு மிகப்பெரிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் தோல்வியடைந்தால், நாடே அதிர்ச்சிக்குள்ளாகிறது, எனக் கூறினார்.மேலும், உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகி விருதை வென்ற தீப்தி சர்மாவிடம், 'நீங்கள் கடவுள் ஹனுமன் டாட்டூ போட்டுள்ளீர்களே, அது எவ்வாறு உங்களுக்கு உதவியது?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தீப்தி, 'என்னை விட கடவுள் ஹனுமன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன். அதுவே என்னுடைய விளையாட்டை மேம்படுத்த அதிகமாக உதவியது,' எனக் கூறினார். தொடர்ந்து, பிரதமர் மோடியின் முகம் பொலிவுடன் இருப்பதற்கு காரணம் என்று இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் கேள்வி எழுப்பினார். உடனே,'அதைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை,' என்று பிரதமர் கூறியதைக் கேட்டு இந்திய வீராங்கனைகளிடையே சிரிப்பலை எழுந்தது. அப்போது, ஆல் ரவுண்டர் ஸ்நேகா ரானா, 'நாட்டு மக்களின் அன்பினால் தான் பிரதமரின் முகம் பொலிவுடன் இருக்கிறது,' என்றார். இதனைக் கேட்ட பிரதமர் மோடி,'நிச்சயமாக, என்னுடைய வலிமைக்கான காரணமே நாட்டு மக்கள் தான். நான் அரசு நிர்வாகத்தில் பல ஆண்டுகளை கழித்து விட்டேன். தொடர்ந்து ஆசிர்வாதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவு தான் இவை எல்லாம்,' எனக் கூறினார். இந்திய மகளிர் அணியினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vasan
நவ 06, 2025 16:10

ஆமாம், கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, சூதாட்ட விளையாட்டுமாகும். இதுவே மோடி சொல்லி சொல்லாதது.


Raman
நவ 06, 2025 17:37

Absolute crap, your comments


abdul kareem
நவ 06, 2025 13:35

ஆமா


V.Mohan
நவ 06, 2025 13:03

தவறாக சோம்பேறிகளின் விளையாட்டுன்னு சொல்லாதீர்கள் சில நாட்கள் முன்பு ஸ்ரேயாஸ் ஐயர் டைவ் அடித்து பந்தை கேட்ச் பிடித்து விழுந்து உயிருக்கே ஆபத்தாகி கடவுள் அருளாலும் கிரிக்கட் வீரர்களின் இன்றைய தகுதியான" "ஃபிட்னெஸ்" இருந்ததாலும் பிழைத்தார். இப்படி கஷ்டப்பட்டு விளையாடறவங்களை சோம்பேறி என சொல்வது கடைஞ்செடுத்த கிரிமினல் தவறு. அப்போ எந்த விளையாட்டு சிறப்பு? எல்லா விளையாட்டுலேயும் கஷ்டப்பட்டுதான் இளைஞர்கள், இளைஞிகள் முன்னேறுகிறார்கள். அது சரி, ஹாக்கி விளையாட்டில் சூரர்களாக இருந்த இந்தியர்கள் இப்போது உலகக் கோப்பையில் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கு மக்களின் ஆதரவு குறைவால் அல்ல. ஹாக்கி விளையாட்டின் இன்றைய கடுமையான உடல்தகுதி தேவையால்தான் இந்திய வீரர்கள் போட்டிபோட இயலவில்லை. அதிலும் மாற்றம் ஏற்படும் நம் இந்திய வீரர்கள் எதிலும் சளைத்தவர்களல்ல. விளையாட்டிலும் அரசியல் உள்ளது. குறை சொல்லாமல், எல்லா விளையாட்டு வீரர்களையும் மதித்து போற்ற வேண்டும் ஐயா


திகழ்ஓவியன்
நவ 06, 2025 12:47

நன்றி


RAMESH KUMAR R V
நவ 06, 2025 12:40

ஜன கோடிகள் வாழ்த்தும் நவ பாரதத்தின் சில்பி.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 12:00

கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல, நம்ம நேரத்தை வீணாக்கும் ஒரு வெட்டி வேலை. மற்ற விளையாட்டுக்களை கொன்ற சோம்பேறிகளின் ஆட்டம்.


பிரேம்ஜி
நவ 06, 2025 12:39

ஆம் ஐயா. விளையாடுபவர்கள் அறிவாளிகள். பார்ப்பவர்கள் பெரிய மனிதர்கள் என்று அறிஞர் பெர்னாட்ஷா சொல்லிய தாக அடிக்கடி கேள்விப் பட்டதுண்டு!


Raman
நவ 06, 2025 17:38

What else one would expect from poiindupuram


vivek
நவ 06, 2025 18:24

சரி சரி ஜெய்ஹிந்த்..டாஸ்மாக் கிளம்பு


Modisha
நவ 06, 2025 18:25

பாக்கிஸ்தான் ஜெயிக்கவில்லையே என்ற வருத்தம் , அப்படித்தானே .


Rathna
நவ 06, 2025 18:58

மர்ம நபர்களின் வழக்கப்படி, விளையாட்டு, இசை, பெண்களுக்கான மரியாதையை இந்த மூன்றும் அகராதியில் இருந்து நீக்கப்பட வேண்டியது.


முக்கிய வீடியோ