உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை கொள்ளை புகழ் ஈரானி கும்பலின் தானே மாவட்டத்தில் போலீஸ் சுற்றி வளைப்பு

சென்னை கொள்ளை புகழ் ஈரானி கும்பலின் தானே மாவட்டத்தில் போலீஸ் சுற்றி வளைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் ஈரானியின் சொந்த ஊரான, மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் பஸ்தி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட ஆறு இடங்களில் கடந்த 25ம் தேதி காலை ஈரானிய கொள்ளை கும்பல், அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது. இந்த திருட்டில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜாபர் குலாம் ஈரானி உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். ஜாபர் குலாம் ஈரானி போலீசாரால் சுட்டுக்கொல்லப் பட்டார். மேற்கு ஆசிய நாடான ஈரானை பூர்வீகமாகக் கொண்ட இந்த கொள்ளையர்கள், மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாணில், அம்பிவாலி பகுதியில் உள்ள பஸ்தியில் வசிக்கின்றனர். செயின் பறிப்பு, பைக் திருட்டு ஆகிய குற்றங்களுக்கு ஈரானிய கொள்ளையர்கள் பிரபலம். கொள்ளையரை அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்கச் சென்றால், ஆடைகள் இல்லாமல் சுற்றிலும் அரண் போல் நின்று, போலீசாரை நெருங்க விடாமல் பஸ்தி பகுதி பெண்கள் தடுப்பர். பஸ்தி பகுதிக்குள் போலீஸ் நுழைந்தால் தாக்குதல் நடத்துவதுடன், போலீஸ் வாகனங்களையும் சூறையாடி விடுவர். தானே, மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதி போலீசாருக்கும், இந்த அனுபவம் நடந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் நடந்த என்கவுன்டரில் ஜாபர் குலாம் உசேன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பஸ்தி முழுவதும் மயான அமைதி நிலவுகிறது.ஏதாவது வன்முறையில் அவர்கள் இறங்கக் கூடும் என போலீசார் கருதுவதால், பஸ்தி, அம்பிவாலி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹா., போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vee srikanth
மார் 28, 2025 12:34

காலுக்கு மாவு கட்டு போட்டு விடுங்கள் - அதே போலெ கை விரல்கள் 10 நசுக்கி விடுங்கள்


PR Makudeswaran
மார் 28, 2025 11:15

உங்கள் கருத்து இது. நல்ல கருத்து. ஆனால் தமிழ் நாட்டு தி மு க மற்றும் அண்ணா தி மு க ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த மதத்திற்கு பரம்பரையாக நிலங்கள் கிராமமே சொந்தம் vakfu போர்டு தான் சுப்ரீம் என்று சொல்லி வோட்டு பொறுக்குகிறார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 28, 2025 08:29

அப்போ இந்த புர்கா போடுவது எதற்காக? யாரும் பார்க்கக்கூடாது என்று கருப்பு டென்ட்க்குள் இருப்பார்களாம் ஆனால் போலீஸ் வந்தால் மட்டும் ... நிற்பார்களாம். என்ன அறிவு.


மதிவதனன்
மார் 28, 2025 08:20

மகாராஷ்டிரா கமிஷனர் பாராட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்


விவசாயி
மார் 28, 2025 07:43

திருடன்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பெண்களையும் என்கவுண்டர் பண்ணுங்க


Siva Balan
மார் 28, 2025 07:39

தமிழ்நாடு என்பது ஒரு முஸ்லிம் நாடு. அவர்கள் அவர்களின் சொந்த நாட்டில் திருடுகிறார்கள். இதில் என்ன தவறு......


karthik
மார் 28, 2025 07:16

ஏன் நம்மகிட்டே பெண்கள் போலீசில் இல்லையா? நம்ம பெண் போலீஸ் வச்சு தூக்கி போட்டு மிதிக்கணும். இந்த மாறி திருட்டு ஜென்மங்களை வளர விட்டா , நாடு தாங்காது.


karupanasamy
மார் 28, 2025 07:00

இதுதான் இசுலாமின் உண்மையான அடையாளம். பாபர், அக்பர், அவுரங்கசீப், திப்புசுல்தான் போன்ற கொள்ளையர்கள் நம்நாட்டில் செய்த திருட்டு குற்றங்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அனைத்து வாஃபு சொத்துக்களையும் அரசுடைமையாக்கவேண்டும்.


N Sasikumar Yadhav
மார் 28, 2025 06:57

அகதியாக வந்தவன்களுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்க கூடாது


புதிய வீடியோ