உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீ என்ன பெரிய கொம்பா: வாட்ஸ்அப் மீது வழக்கு; அதிரடியில் இறங்கிய போலீஸ்!

நீ என்ன பெரிய கொம்பா: வாட்ஸ்அப் மீது வழக்கு; அதிரடியில் இறங்கிய போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குருகிராம்: வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத வாட்ஸ்அப் அதிகாரிகள் மீது ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கடந்த ஜூலை 17ம் தேதி குற்றவழக்கு தொடர்புடைய ஒரு நபரின் தொலைபேசி எண்ணின் வாட்ஸ்அப் கணக்கு குறித்த தகவல்களை வழங்குமாறு குருகிராம் போலீஸார், வாட்ஸ் நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், போலீசாரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும், அதனை கண்டுகொள்ளாமலும் அந்த நிறுவனம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து, மற்றொரு குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி தகவல்களை வழங்குமாறு ஜூலை 25ம் தேதி மீண்டும் குருகிராம் போலீசார் வாட்ஸ்அப் நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 28ம் தேதி வரை போலீசாரின் கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், குற்றவழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, வாட்ஸ்அப் இயக்குநர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கூறிய போலீசார், 'நாட்டின் சட்டவிதிகளை மீறி, தகவல்களை அளிக்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது. இது சட்டப்படி குற்றம்,' எனக் கூறினர். இந்தியாவில் செயல்படும் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும், தேவைப்படும் போது அரசுக்கு தேவையான விபரங்களை வழங்க வேண்டும் என்பது விதியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sudha
செப் 29, 2024 19:03

அப்படியே மூடிடுங்க இந்தியா உருப்படும்


அப்பாவி
செப் 29, 2024 18:02

அந்த ஒரு வழியைத் தவிர வேறு வழியே கிடையாதுன்னு போலீஸ் பழி கிடப்பது பரிதாபம். வழக்கு போடுவதில் முதலிடம்.


ரெட்டை வாலு ரெங்குடு
செப் 29, 2024 19:30

இந்த செய்தியை படிச்சதிலிருந்து திருட்டு பசங்களுக்கு நாக்கில் சுட்டால் போல இருக்குமே .. விளையாட்டு விளையாடுங்க.. ஆனா அதுவே ஒருபடிமேல போனால், இன்னொருவரின் சொத்தை அபகரிச்சால் , நாட்டிற்கு குந்தகம் விளைவித்தால் உங்க வாய்க்கே கும்மாங்குத்து காத்திட்டு இருக்கும், பார்த்து பதோஷ நடந்துக்கோங்க .டேக் கேர் .


தத்வமசி
செப் 29, 2024 17:59

உடனடியாக கைது செய்யுங்கள். இவனுங்களுக்கு தாங்களே அமெரிக்க ஜனாதிபதி என்று நினைப்பு.


Kasimani Baskaran
செப் 29, 2024 15:44

மார்க்கின் முகநூல் என்றோ வாட்சாப்ப்பை வாங்கிவிட்டது. முகநூலுக்கு இருக்கும் திமிர் வாட்சாப்ப்புக்கும் இருக்கும்.


புதிய வீடியோ