உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவை டூ சென்னை சென்ற இண்டிகோ விமானத்தில் பெண் பயணிக்கு துன்புறுத்தல்: போலீசார் விசாரணை

கோவை டூ சென்னை சென்ற இண்டிகோ விமானத்தில் பெண் பயணிக்கு துன்புறுத்தல்: போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இண்டிகோ விமானத்தில் பெண் பயணி ஒருவர் சக பயணிகளால் துன்புறுத்தப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், விமானத்தில் குடிபோதையில் இருந்த மூன்று ஆண் பயணிகள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததாக புகார் கூறியுள்ளார். சென்னையில் தரை இறங்கிய பிறகும் அவர்கள் தன்னை துன்புறுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலைய போலீசாரிடம் அளித்த புகாரில் இண்டிகோ விமான நிறுவன எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது: பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை விமான நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அவர் புகார் அளித்த ஆண் பயணிகளிடமும் விசாரணை நடத்தினோம். தேவைப்பட்டால், மேலும் விசாரணைக்காக நாங்கள் ஒரு வழக்கைப் பதிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பயணியின் பிரச்னையை சரி செய்ய நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். எந்தவொரு விதமான இடையூறு விளைவிக்கும் நடத்தைக்கும் இண்டிகோ நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்கும். எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழலை உறுதி செய்வதில் இண்டிகோ விமான நிறுவனம் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பெண் பயணி தங்களிடம் புகார் கூறியதும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த மூன்று பயணிகளிடம் அமைதியாக இருக்கும்படி தாங்கள் அறிவுரை கூறியதாக இண்டிகோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

J swaminathan
ஆக 21, 2025 10:29

Indigo never serve liquor in domestic flights but airports have shops selling liquor. why blame indigo?


Rathna
ஆக 14, 2025 18:44

முதன் முதலில் பயணம் செய்த நாகரீகம் இல்லாத கூட்டமாக இருக்கும். உள் நாட்டு விமானங்களில் மது வழங்குவது அனுமதிக்கப்படவில்லை. விமான நிறுவனங்கள் இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வது மிக கேவலம்.


Kasimani Baskaran
ஆக 14, 2025 17:25

பொது மக்கள் அங்கேயே தர்ம அடி கொடுத்திருந்தால் அடுத்த முறை இது போல நடக்கமாட்டார்கள்


Kulandai kannan
ஆக 14, 2025 17:02

அந்த மூன்று பேரும் ஒரு கல் ஒரு கண்ணாடி சினிமா ரசிகர்களாக இருக்க வேண்டும்.


Ram
ஆக 14, 2025 16:21

திராவிட செம்மலாக இருப்பார்கள்


N K Sabesan
ஆக 14, 2025 15:04

தமிழகத்தை வாழ வைக்கும் தெய்வங்களான மதுப் பிரியர்களுக்கு விமானத்தில் கூச்சலிடக் கூட உரிமையில்லையா? அரசின் கட்டுப்பாட்டிலுள்ள விமான போக்குவரத்துத் துறையின் சர்வாதிகாரப் போக்கை இந்த திராவிட அரசு அனுமதிக்காது


JaiRam
ஆக 14, 2025 15:03

உ பி இஸ் கள் வாங்கும் 200 ரூவாய்க்கு விமான நிலையத்தில் ஒரு டீ கூட கிடைக்காது, உ பி இஸ் களுக்கு தெரிந்ததெல்லாம் கள்ளச்சாராயம் பணிபுரி அவ்வளவுதான்


naranam
ஆக 14, 2025 13:40

விமானப் பயணிகளுக்கும் அவர்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் பிரத்லைசெர் சோதனை மூலம் கண்டறிந்து அவர்களை விமானதில் ஏற அனுமதிக்க வேண்டும். மேலும் இது போன்று சக பயணிகளிடம் வம்பு தும்பு செய்பவர்களை உடனே கைது செய்து ‌சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் புகைப்படங்களையும் செய்தித் தாள்களில் வெளியிட்டு அவர்களை அவமானப் படுத்தலாம்.


VSMani
ஆக 14, 2025 14:24

விமானத்தில் மது கொடுப்பார்கள்.


தமிழ்வேள்
ஆக 14, 2025 12:59

பிரீத் அனலைசர் மூலம் அனைத்து பயணிகளையும் செக் செய்து விமானத்தில் அனுமதிக்க வேண்டும்... குடித்து விட்டு வந்தவனது பயணம் ரீஃபண்ட் இல்லாமல் ரத்து செய்ய வேண்டும்.. குடித்து விட்டு வருபவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விமான நிலையத்தை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டால் பின்னர் குடித்து விட்டு வரமாட்டான்..


Svs Yaadum oore
ஆக 14, 2025 11:25

மூன்று பயணிகளும் காங்கிரஸ் இத்தாலி டெல்லிக்காரன் வடக்கனாக இருக்கும் ....


புதிய வீடியோ