மேலும் செய்திகள்
தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
13-Sep-2025
புதுடில்லி:வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது நாயை ஏவி கடிக்கச் செய்த குடும்பத்தினரை போலீசார் தேடுகின்றனர். நாய் கடித்து காயம் அடைந்த ஆறு பேர் சிகிச்சை பெற்றனர். வடகிழக்கு டில்லி சுபாஷ் பார்க்கில் வசிப்பவர் ஷாலு. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கேதன்,32. இருவருக்கும் இடையே பைக் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஷாலு, தன் வளர்ப்பு நாயை, கேதன் குடும்பத்தினர் மீது ஏவி விட்டார். நாய் கடித்து கேதன் குடும்பத்தில் ஆறு பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த ஆறு பேரும் ஜி.டி.பி., மற்றும் ஜெ.பி.சி., மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஐந்து பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து, வெல்கம் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாலு மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
13-Sep-2025