உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் தேடப்பட்ட இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

கொலை வழக்கில் தேடப்பட்ட இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

புதுடில்லி:பிரபல தொழிலதிபர் கொலை வழக்கில் தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். டில்லி சத்தார்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அருண் லோஹியா, 34. கடந்த மாதம் காரில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு பேர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, தெற்கு டில்லியின் பி.ஆர்.டி., காரிடார் பகுதியில் இந்த இரண்டு குற்றவாளிகளும் இரு சக்கர வாகனத்தில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார், இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றனர். இதை எதிர்பாராத அவர்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இதில், இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்நிலை தேறியதும், அவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி