லிப்ட் அளிப்பதாக கூறி பெண் போலீஸ் பலாத்காரம்
கான்பூர்,உத்தர பிரதேசத்தில் பணி முடித்து சென்ற பெண் கான்ஸ்டபிளுக்கு, 'லிப்ட்' அளிப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தின் சென்பச்சிம் பாரா பகுதி யைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிள், பணி நிமித்தமாக அயோத்திக்கு கடந்த 19ம் தேதி சென்றார். அதன்பின், கர்வா சவுத் விரதத்திற்காக தன் வீட்டிற்கு அன்றிரவு புறப்பட்டார். அப்போது, அவ்வழியாக வந்த அவரது அண்டை வீட்டில் வசிக்கும் தர்மேந்திரா பஸ்வான் என்பவர், தன் பைக்கில் லிப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்றார்.ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பெண் கான்ஸ்டபிளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது, அப்பெண் கூச்சலிட்டுள்ளார்.ஆனால், யாரும் அவருக்கு உதவ வரவில்லை. தர்மேந்திராவின் விரலை கடித்து, பெண் கான்ஸ்டபிள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விபரங்களை கூறி புகார் அளித்தார். இதையடுத்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தர்மேந்திர பஸ்வானை போலீசார் கைது செய்தனர்.