உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமை ஆவண விவகாரத்தில் தேர்தல் கமிஷன் சொல்வதே சரி: சுப்ரீம் கோர்ட் ஏற்பு

குடியுரிமை ஆவண விவகாரத்தில் தேர்தல் கமிஷன் சொல்வதே சரி: சுப்ரீம் கோர்ட் ஏற்பு

புதுடில்லி: ''ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறுவது சரியானது. அந்த ஆவணத்தை ஆய்வு செய்ய வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதனை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்ஷி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, ' ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது' என தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சூரியகாந்த் கூறியதாவது: '' ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறுவது சரியானது. அந்த ஆவணத்தை ஆய்வு செய்யப்பட வேண்டும்' என்றார்.மேலும் நீதிபதி கூறுகையில், முதலில் இத்தகைய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு வரும். ஆனால், அவர்களுக்கு அதிகாரம் இருந்தால், பிரச்னை ஏதும் இருக்காது . இந்தப் பணிகள் சட்ட விரோதம் என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை ரத்து செய்வோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான கபில் சிபல் கூறுகையில், தேர்தல் கமிஷன் ஆதாரை ஏற்க மறுக்கிறது. நான் இந்தியன் என்று சொன்னால், அதனை நிரூபிக்க வேண்டிய வேண்டிய கூடுதல் சுமை எனக்கு ஏற்படுகிறது என்றார்.நீதிபதி சூரியகாந்த்: இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க ஏதேனும் ஆவணம் இருக்கும். அனைவரும் சான்றிதழ் வைத்துள்ளனர். அது இருந்தால் தான் சிம் கார்டு வாங்க முடியும் என்றார்.இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளையும் விவாதம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kasimani Baskaran
ஆக 12, 2025 22:08

அப்ப.. செத்துப்போனவங்களை பட்டியலில் சேர்க்கமுடியாதா எஜமான்?


K.n. Dhasarathan
ஆக 12, 2025 21:21

தேர்தல் ஆணையமா, தில்லுமுல்லு ஆணையமா, என்று கேள்வி கேட்கும் நிலைமை உருவாக்கி உள்ளது, எங்கு பார்த்தாலும் ஊழல் , பல மாநிலங்களில் அநியாயமாக பல ஆயிரம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள், பல மாநிலங்களில் பல லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள், இதில் எதோ தவறுதலாக நடந்த பிழை அல்ல, பயங்கரமான நெட் ஒர்க் வேலை செய்யப்பட்டு உள்ளது. எத்தனை காலமாக நடந்ததோ தெரியவில்லை, ஆனால் உலக அளவில் இந்தியாவை மிக மிக கேவலப்படுத்தி விட்டது. தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் மற்றும் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தானாக பதவி விளக வேண்டும், இந்த கமிஷனையே களைத்து உத்திராவிட வேண்டும். எப்படியும் புதிதாக வாக்களிப்போர் லிஸ்ட் எடுத்தாக வேண்டும். ஒரு வகையில் உள்துறை அமைச்சகத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது, ஏன் எனில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் குழுவையே மாத்தி பல வேலைகளை பண்ணியது. சரி இனி பண்ண வேண்டியது என்ன வேனில் ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து கட்சியினரும் தங்கள் தொகுதி வாக்காளர்கள் லிஸ்ட் செக் செய்து, தவறு இருந்தால் முறையாக புகார்/வழக்கு செய்ய வேண்டும்.


மனிதன்
ஆக 12, 2025 21:03

அப்போ வந்தவர்கள் போனவர்களுக்கெல்லாம் ஆதாரை தூக்கிக்கொடுத்தது யாரு? உங்க அரசாங்கம்தானே?தவறு உங்களுடையதுதானே? சரி ஆதார் வேண்டாம் என்றால், ரேஷன் கார்டை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே? சரி விடு பழைய ஒட்டர் ID அது நீங்கள் கொடுத்ததுதானே..? அதெல்லாம் பங்களாதேசிக்கும், பாகிஸ்தானிக்குமா கொடுத்தீர்கள்? அப்போ குற்றவாளி நீங்கள்தானே? சரி விடு இதையெல்லாம் வைத்துதான் போனமுறை வென்றீர்கள்? அதற்காக ராஜினாமா செய்வீர்களா??? சும்மா மக்களை எல்லாம் மடையர்களாக எண்ணிக்கொண்டு உருட்டும் உருட்டுக்கள்....


Ganapathy
ஆக 12, 2025 21:32

என்ன எல்லாத்துக்கும் நீங்க..நீங்கன்னுகிட்டு...யோவ் இதையெல்லாம் கொண்டாந்ததே காந்தி காங்கிரஸ்தானே..சும்மா உளறிகிட்டு..


vivek
ஆக 12, 2025 21:40

எதுக்குடா ராஜினாமா செய்யணும்...


SUBBU,MADURAI
ஆக 12, 2025 21:46

ஏலேய் ரோஹிங்கியா துலுக்கப் ... நீயெல்லாம் எங்கள் நாட்டில் இருந்து கொண்டு வன்மத்தை கக்கும் கருத்தையே போடுகிறாய் உங்களை எல்லாம் சுளுக்கு எடுக்கும் காலம் விரைவில் வரப் போகிறது


MARUTHU PANDIAR
ஆக 12, 2025 22:18

2008 இல் யாரு ஆட்சிலே? அப்பவே ஆதார் குடுக்க தொடங்கியாச்சு. உன்ன மாதிரி வந்தவன் போனவன் எல்லாருக்கும் சிங்கு ஆட்சியிலேயே கொடுத்தாச்சு. 2014 வரைக்கும் இந்த கூத்து தான். தெரிஞ்சா வாய தொறக்கணும். என்னலே ?


மனிதன்
ஆக 13, 2025 20:08

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க... அதைவிட்டு விட்டு என்னுடைய குடியுரிமையைப் பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டாம், ஏனென்றால் நீங்கள்தான் வெந்தேறிகள் அல்லது வந்தேறிகளுக்கு வால் பிடிப்பவர்கள்....


தத்வமசி
ஆக 12, 2025 21:00

இருபது வருடம், முப்பது வருடங்கள் முன்பு வந்தவரையே இன்னும் வெளியேற்ற வில்லை. அவர்களுக்கு இங்கு பிறந்தவர்களை எப்படி வெளியேற்றப் போகிறீர்கள் ? இவர்களை விட அவர்கள் இன்னும் பரவலாக நிறைந்து இருப்பார்கள். இதில் புரிவது என்னவென்றால் இந்தியா திறந்திருக்கும் வீடு. எவனும் வரலாம் போகலாம். நீதிமன்றம்-அரசியல்-தேர்தல் ஆணையம்-பாராளுமன்றம்-எதிர்கட்சிகள்-வழக்குகள் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நம் நாடு என்பதால் நெஞ்சை நிமிர்த்தி சட்டம் சும்மா விடாது என்று கூறலாம். ஆனால் இந்திய சட்டங்கள் பலவீனமானவை என்று அவர்களுக்கும் நன்றாக தெரியும். நேரு பரம்பரை ஆண்ட நாடு. இப்படித்தான் இருக்கும். அதற்கு இந்த தலைமுறை ஜோக்கர் நன்றாக நாடகம் ஆடுகிறார்.


GMM
ஆக 12, 2025 20:56

கபில் ஓட்டு போட இந்திய குடிமகன் என்று கட்டாயம் நிரூபிக்க வேண்டும். இந்தியன் என்று நிரூபிக்க பெற்றோர், பிள்ளைகள் பிறப்பு சான்று உதவும். பள்ளி சான்று உதவும். இந்திய குடிமகன் மட்டும் தான் வாக்களிக்க முடியும். வாக்குரிமை மக்கள் பிரதிநிதி உரிமை கொடுத்து விடும். வயநாட்டில் அந்நிய தீவிரவாதி வேட்பு மனு தாக்கல் செய்து எளிதில் வெற்றி பெற முடியும். இது போல் நாட்டில் ஏராளமான தொகுதிகள் உள்ளன. அதன் பின் அரசியல் சாசனம் கள்ள குடியேறிகள் சிம்மாசனம் ஆகிவிடும். ஒரு கள்ள ரேஷன் கார்டு சில ஆயிரம் இழப்பை ஏற்படுத்தும். கள்ள குடியேறிகள் வாக்கு நாட்டின் தலை விதியை மாற்றிவிடும். தேர்தல் ஆணையம் பணியில் அரசியல் கண்ணோட்டத்தில் உச்ச நீதிமன்றம் குறுக்கீடு கூடாது.?


MARUTHU PANDIAR
ஆக 12, 2025 22:21

இது வரையில் கப்புகளுகு சிப்பு இந்த நாட்டுக்காக எந்த கோர்டிலாவது வாதாடிருக்காப்லயான்னு தெரியல. எல்லாம் நாட்டுக்கு எதிராகத் தான். தான் இந்தியன்னு நிரூபிக்கறது இந்த ஆளுக்கு சுமையாய் இருக்கக்கூடாதே? என்ன நியாயம்? அப்படீன்னு கேக்கறாங்க.


M Ramachandran
ஆக 12, 2025 20:21

காங்கிரஸும் திமு கா வும் தில்லு முல்லு கட்சியை என்பதில் யாருக்குமென சந்தேகம் வந்த தில்லை.இரண்டுக்கும் பல ஒத்துமையான விஷயங்கள். பொய் யுரைகள் நிஜம் போல் ஜோடிப்பது, குடும்ப கட்சி, பாரமன்றத்தில் மற்றும் ராஜ்ய சாப வில் எந்த மாசோதாவையும் நிறைய்ய வேற்ற விடாமல் தடுத்தல், நாட்டின் இறையாண்மைக்குக்கு எதிராக செயல்படுதல், ஏதோ அவர்கள் தான் சிறுபான்மையிருக்கு கேடயமாக இருப்பது போல் நடித்து ஏமாற்றி அவர்களுக்காக ஒன்றும் செய்வதில்லை அவர்கள் வாக்குகளை திருடுதல். அயல்நாட்டினருடன் கள்ள உறவு வைத்து கொண்டு நம் நாட்டின் தோழி ல் வள முன்னேற்றத்தை கெடுத்தல் இன்னும் பல.


GMM
ஆக 12, 2025 19:57

இந்திய குடியுரிமைக்கான ஆவணமாக ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் கமிஷன் சொல்வது 100 சதவீதம் சரி. ஆதார் ஒரு அடையாள அட்டை. குடியுரிமை சட்டம் 1955 ன் படி, மத்திய அரசின் குடியுரிமை துறை வழங்கும் பதிவு எண் விவரம் உள்ள சான்று மட்டும் தான் சட்டபூர்வமானது. தேர்தல் ஆணைய அரசியல் சாசன பணியை சட்ட விரோதம் என்று எப்படி நிரூபிக்க முடியும்? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை ரத்து செய்தால், தேர்தல் ஆணையம் தன் அதிகாரம் கொண்டு யாரையும் கைது செய்ய முடியும்.? குடியுரிமை, பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கை நீதிபதி அதிகார எல்லையில் வராது. வக்கீல் மூலம் தீவிரவாதிகள் நீதிபதியை மடக்கி, தேச விரோத உத்தரவு பிறப்பிக்க செய்ய முடியும். ஒரு தவறான உத்தரவில் பெரிய பிரச்சனை உருவாகி விடும்.? நீதிபதி சட்ட தீர்வு எல்லையில் இருக்க வேண்டும்.


பெரிய குத்தூசி
ஆக 12, 2025 19:47

கபில் சிபிள் நீ உண்மையான இந்தியனாக நிரூபிக்க விடுமானால் ஆதார் அல்லாமல் நீ பிறந்த பிறப்பு சான்றிதழ், படித்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை காண்பிக்கலாம், உனது பெற்றோர்களின் இருப்பிட, கல்வி சான்றிதழை காண்பிக்கலாம். இந்தியாவிற்கு எதிரான கோட்பாடு கொண்ட கபில் சிபிள் வக்கீலை நாடுகடத்த பாகிஸ்தானில் விடவேண்டும், ஓவர் டெமோகிராசி உரிமையை கபில் சிபிள் , அபிஷேக் சிங்வி போன்ற வக்கீல்கள் இந்திய இறையாண்மைக்கு சவால் விடுகிறார்கள். இந்த வழக்கு கடைசியில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக முடிந்து பிஹாரில் மேற்கொண்ட தேர்தல் ஆணையத்தின் நீக்கப்பட்ட 72 லட்ச இந்தியர் அல்லாத சட்டவிரோத குடியேறிகளின் வாக்கு அடையாள பதிவு செல்லுபடியாகும் என கடைசியில் காங்கிரஸ் சுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்.


Karthik Madeshwaran
ஆக 12, 2025 19:15

தேவையில்லாமல் இந்திய மக்களை நீதிமன்றம் குழப்ப கூடாது. ஒருவர் இந்தியாவின் குடிமகன் என்று நிரூபிக்க எது தான் ஆவணம் ? அதை ஏன் நீதிமன்றம் நேரிடையாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் ? பிறப்பு சான்றிதழ் என்று தயவு செய்து மொக்கை போடாதீர்கள். அதை xerox கடையிலே வடக்கர்கள் வாங்கி விடுவார்கள்.


vivek
ஆக 12, 2025 20:33

திமுக செய்த தில்லுமுல்லை மாதேஷ் விலாவாரியாக விளக்கி விட்டார்


Karthik Madeshwaran
ஆக 12, 2025 19:03

இந்திய குடிமகன் என்பதற்கு ஆதார் கார்ட் ஆவணம் இல்லை என்றால் வேறு எது தான் ஆவணம் ? பிறகு எதற்காக வாக்களிக்கும் பொழுது ஆதார் அட்டையை காண்பித்து வாக்களிக்க அனுமதித்தார்கள் ? இன்று சிம்கார்ட் வாங்க, பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ண, பான் கார்டு எடுக்க, ஏன் பாஸ்போர்ட் அப்ளை செய்ய கூட ஆதார் கார்ட் மட்டும் தான் முதலில் கேட்கிறார்கள்.


vivek
ஆக 12, 2025 20:31

மாதேஷ்....உனக்கு உன் பிறப்பு சான்றிதழ் முக்கியம் இல்லையா....


vivek
ஆக 12, 2025 20:40

நீ எவளோ கத்தி கதறி தனியா கூப்பாடு போட்டாலும் நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது