உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு

பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்படுகிறது. அதேநேரத்தில் ஒரு குதிரைக்கு ஒரு நாள் செலவு ரூ.400 ஆகிறது என உரிமையாளர்களை தங்களது கஷ்டத்தை தெரிவித்துள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்த வந்த உள்ளூர்வாசியான சையத் அடில் ஹூசேன் ஷா. தற்போது, பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் வருகை சரிந்துள்ளது. பஹல்காமில் உள்ள 6,000 குதிரைகளில், 100 குதிரைகளுக்கு மட்டுமே வேலை உள்ளது. மீதமுள்ள 5,900 குதிரைகள் வேலையில்லாமல் சும்மா இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் குதிரை ஓட்டி மற்றும் குதிரை உரிமையாளர்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால், பஹல்காமில் உள்ள குதிரை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் ரூ.2 கோடி இழப்பை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக, சீசனில், குதிரை உரிமையாளர்கள் ஒரு குதிரைக்கு ரூ.3,000 சம்பாதிப்பார்கள். ஒரு குதிரையின் விலை ரூ.1 லட்சம். ஒரு குதிரை ஐந்து வயது முதல் 18 வயது வரை வேலை செய்யலாம்.

ரூ.400 செலவு

ஒரு குதிரைக்கு உணவு மற்றும் தண்ணீருக்கான குறைந்தபட்ச செலவு ஒரு நாளைக்கு ரூ.400 ஆகிறது. அதேநேரத்தில், குதிரையின் வயது அதிகரிக்கும் போது, ​​அதன் சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கிறது. சில நேரங்களில் இந்த செலவு ஒரு நாளைக்கு ரூ.1,500 ஆக உயரும்.பஹல்காமில் ஐந்து குதிரை ஆபரேட்டர் சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு நபரும் இரண்டு குதிரைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பஹல்காமில் இருந்து பைசரன் பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல குதிரை வீரர்கள் ரூ.1,300 வசூலிக்கிறார்கள். பஹல்காமில் வசிக்கும் 1 லட்சம் உள்ளூர் மக்கள் குதிரைகளில் இருந்து வருமானத்தை நம்பி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

என்றும் இந்தியன்
ஜூன் 09, 2025 16:44

தவறு செய்தது யார்???காஷ்மீர முஸ்லீம் தீவிரவாத சப்போர்ட் ஆட்கள் சப்போர்ட் செய்ததால் தான் தீவிரவாதிகள் 25 இந்துக்களை கொலை செய்து விட்டு தப்பிக்க முடிந்தது. ஆகவே குதிரை உரிமையாளர்கள் ஒவ்வொரு மரணமடைந்த குடும்பத்திற்கு ரூ 1 கோடி அதாவது ரூ 25 கோடி கொடுத்தால் நிச்சயம் இந்த நிலைப்பாடு மாறும். இப்போது அங்கு வரும் மக்கள் தனக்கு பாதுகாப்பு உள்ளது அது இல்லாத பட்சத்தில் நம் குடும்பத்திற்க்காக பணம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை வரும். இதில் வேடிக்கை என்னவென்றால் தீவிரவாதிகள் பலரை பிடித்து உன் மதம் என்ன இந்துவா அப்போது சுட்டார்கள் முஸ்லீம் என்றால் விட்டு விட்டார்கள். ஆகவே காஷ்மீர் வருவது இந்துக்கள் கூட்டம் என்று இப்போது தெரிந்திருக்குமே, இந்துக்களை சுட்டால் அப்புறம் எப்படி இந்துக்கள் வருவார்கள்?????அப்போ காஷ்மீர் நிலைமை இப்படித்தானிருக்கும் என்றும்


ram
ஜூன் 09, 2025 15:43

நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் கர்மா சும்மா விடாது அனுபவிக்கட்டும்.


Lokesh Babu
ஜூன் 09, 2025 14:15

antha manila perumpanmai ena makkal theeveera vathigalai atharikkamal irunthalay angay tourism perughum


Amar Akbar Antony
ஜூன் 09, 2025 12:37

கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீர் தனி நாடு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூவிக்கொண்டு இருந்தீர்கள் ஒரு காங்கிரஸ் காரனுக்கும் ஒரு உள்ளூர் கட்சிக்காரனுக்கும் மக்களுக்கு மன்னிக்க ஒன்றியத்தில் அதிகாரத்தில் கூத்தடித்து கொள்ளையடித்து கொண்டிருந்த திருட்டு பெருச்சாளிகளுக்கும் காஷமீர் மக்களுக்கு சரியான முறையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியாத கையாலாகாத உருப்படியில்லாத தேசம் எக்கேடுகெட்டாலும் சொந்த குடும்பம் மிக நன்றாக பதினெட்டு தலைமுறைக்கு களவாடி சேர்த்துவைக்க ஊழல் செய்துவந்த இண்டி கூட்டணியருக்கும் உபிசுக்களுக்கும் காஷ்மீர் பற்றி பதிவிடக்கூட உரிமையில்லை. இன்று சுற்றுலாவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வருகிறார்கள் என்றால் கோடிகளில் வருமானம் தான். என்றால் அதன் முழுக்காரணம் பா ஜ க ஆர் எஸ் எஸ் தான். இவ்விரு அமைப்புகளின் மூலம் வளர்ந்த ஒன்றிய அரசின் தூண்களான மோடி ஜி ஷா ஜி மற்றும் சகாக்களும் தான். இப்போதைய சில கஷ்டங்களும் விரைவில் மாறும். சில விஷமிகளை உள்ளே தள்ளி படம் புகட்டவேண்டும். இப்போதான் அப்துல்லாக்கள் ஆமாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். தரூர் இப்படி லிஸ்ட் உயரும்.


Rathna
ஜூன் 09, 2025 12:07

இந்த மாதிரி ஒரு சம்பவம் உள்ளூர் தொடர்பு இல்லாம நடக்க வாய்ப்பு இல்லை. அப்பாவி மக்களை காவு கொடுத்த காட்டுமிராண்டிகளுக்கு, இது இயற்கை கொடுத்த மிக பெரிய பரிசு. அந்த ஒருஇறைவனாலே கூட மாற்ற முடியாது.


Keshavan.J
ஜூன் 09, 2025 11:59

2 கோடி எல்லாம் செம பீலா . அது என்ன பறக்கும் குதிரையா . பீலா மன்னர்கள்.


SANKAR
ஜூன் 09, 2025 15:45

it is total loss suffered by all owners over a period of one month.6000 horses to be fed daily and they earn nothing.think objectively and avoid absurdities


Siva Kavi
ஜூன் 09, 2025 11:50

உண்மையான இந்துக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லக்கூடாது.


Siva Kavi
ஜூன் 09, 2025 11:50

தயவுசெய்து யாரும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம். அங்குள்ளவர்கள் தீவிரவாதிகளுக்கு மற்றும் தீவிரவாத செயலுக்கு துணை புரிந்து கொண்டுள்ளதால் அந்த மக்கள் கண்டிப்பாக பிச்சை எடுத்து தான் வாழ வேண்டும். இவர்களுக்கு தெரியாமலா தீவிரவாதிகள் அந்த இடத்துக்கு வர முடியும். சுற்றுலா செல்லும் மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.


Anand
ஜூன் 09, 2025 10:40

காஷ்மீர் விஷயத்தில் பொங்கியெழும் வைகோ எங்கே போனான்?


ramesh
ஜூன் 09, 2025 13:23

யார் உங்கள் தம்பியா வைகோ . வார்த்தையில் மரியாதை பயன்படுத்துங்கள்


Dharmavaan
ஜூன் 09, 2025 10:25

பகல் கொள்ளை வசூல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை