உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போப் பிரான்சிஸ் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார். போப் பிரான்சிஸ் உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ''துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்; அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது'' என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு

போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:போப் மறைவை ஒட்டி, இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் .தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதுடன், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 12:48

மறைந்த அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க நமது துணை முதல்வர் செல்லப்போகிறாராமே வீடியோ போட்டோகிராபர் எல்லாம் ரெடியா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 22, 2025 11:21

இந்தியாவில் மதமாற்றம் தொடர்ந்து நடக்கணும்ன்னு சொன்ன வாய்க்கு அரிசி இல்ல, சர்க்கரை போடுங்க ....


மேத்யூ
ஏப் 22, 2025 09:10

துக்கம் இருக்கட்டும். எல்லா நிறுவனங்களும் வேலை செய்யுங்க.


முக்கிய வீடியோ